Wednesday, February 07, 2018

295. ஆவியான எங்கள் அன்பு தெய்வமே

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
அடியோரை ஆட்கொண்டு நடத்துமே
ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
அன்பினால் இன்று அலங்கரியும்..


1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே
துதிக்கத் தூண்டும் துணையாளரே
சாத்தானின் சகல தந்திரங்களை
தகர்த்தெறிய வாரும் ஐயா

2. சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
உயிர்பெறச் செய்பவரே
சரீரங்களின் தீய செயல்களையே
சாகடிக்க வாருமையா

3. பெலன் இல்லாத நேரங்களில்
உதவிடும் துணையாளரே
சொல்லொண்ணா பெருமூச்சோடு
ஜெபித்திட வாருமையா

4. மனதை புதிதாக்கும் மன்னவனே
மறுரூபமாக்குமையா
ராஜாவின் இரண்டாம் வருகைக்காக
எந்நாளும் ஏங்கச் செய்யும் – இயேசு

5. தேவாதி தேவனின் ஆழங்களை
ஆராய்ந்து அறிபவரே
அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி
எப்போதும் நடத்தும் ஐயா


Tuesday, February 06, 2018

287. சர்வ வல்லவர் என் சொந்தமானர்

சர்வ வல்லவர் என் சொந்தமானர் (எஜமானன்)
சாவை வென்றவர் என் ஜீவனானவர் (மணவாளன்)
ஆ…இது அதிசயம் தானே
ஓ…இது உண்மைதானே


1. கண்டுகொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம்
இயேசுதான் என் இரட்சகர்
இயேசு தான் என் ராஜா
2. சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதய்யா
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்
3. பரலோகத்தில் எனது பெயர்
எழுதி விட்டார் என் இயேசு
என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வது தான்
4. ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவேன்
ஜீவிக்கின்றார் என் இயேசு
சீக்கிரமாய் வந்தீடுவார்




Monday, February 05, 2018

284. பாவமன்னிப்பின் நிச்சயத்தை

பாவமன்னிப்பின் நிச்சயத்தை
பெற்றுக் கொள்ள வேண்டும்
பரலோகத்தில் ஓர் இடம் நீ பெறவேண்டும்


இயேசு தருகிறார் இன்று தருகிறார்
அதற்காகத் தான் சிலுவையிலே
இரத்தம் சிந்தி விட்டார்


1. முதன்முதலாய் தேவனுக்கு உதந்தைத் தேடு
பின் எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்
2. நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்
நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு
3. வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே
நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார்
4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை
இயேசு ராஜா நாமமில்லாமல் இரட்சிப்பும் இல்லை


Monday, October 16, 2017

92. வாரும் ஐயா போதகரே வந்தெம்மிடம

1. வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம் – வாரும்

2. ஒளிமங்கி இருளாச்சே
உத்தமனே, வாரும் ஐயா
கழுத்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய் – வாரும்

3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே, நலம் தருவாய் – வாரும்

4. உன்றன் மனை திருச்சபையை
உலக மெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்யம் அளித் தாண்டருள்வாய் – வாரும்

5. ஆதரையிலென் ஆறுதலே
அன்பருக்குச் சதா உறவே
பேதையர்க்குப் பேரறிவே
பாதை மெய் ஜீவ சற்குருவே – வாரும்

91. நம்பி வந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே

நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே – திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே

1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே – நான்

5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான்

Friday, October 13, 2017

80. ஏசுவையே துதிசெய், நீ மனமே

ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் - கிறிஸ் தேசுவையே

சரணங்கள்

ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் - கிறிஸ் தேசுவையே

1. மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து --- ஏசுவையே

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் --- ஏசுவையே

3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க --- ஏசுவையே

Saturday, September 23, 2017

500. ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிஜனம் இருந்தாலும்

ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட (இயேசுவைப்போல்)
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே

நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க
என்னைவிட்டு க்கொடுக்கலயே……
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே

காசு பணம் இல்லாம
முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே

நான் உடஞ்சு போயி கிடந்து
நான் நொருக்கபட்டு கிடந்து
என்னை ஒட்டி சேர்க்க
நீங்க வந்ததது நான் மறக்கலையே
என் கண்ணீரை துடைத்துவிட்டத
நான் மறக்கலையே