Saturday, July 08, 2017

199. நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்


நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்

நன்றி ஐயா!

நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன்
நன்றி ஐயா நன்றி ஐயா - இயேசய்யா

   

1. தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழிநடத்தி மகிழ்கின்றீர்
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே - நன்றி

    

2. பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
தீமையான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறீர் - நன்றி

 

3. கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர்
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேய்ப்பவரே - நன்றி

196. இரத்தம் ஜெயம் இரத்தம்

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம் காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்

எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம் எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம் அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம் அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் ... இரத்தம்

பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்
சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் - நமக்கு ... இரத்தம்

விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
வெற்றிமேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம்
பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் ... இரத்தம்

நமக்காய் பரிந்து பேசும் இரத்தம் ஜெயம்
நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம் நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்
நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் ... இரத்தம்

பிரிவினை நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம் ... இரத்தம்

குற்றமில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம்
குறைகளை போக்கிடும் இரத்தம் ஜெயம்
விலையேறப் பெற்ற இரத்தம் ஜெயம்
விண்ணகம் நடத்திடும் இரத்தம் ஜெயம் ... இரத்தம்

Friday, July 07, 2017

194. பிதாவே ஆராதிக்கின்றோம்

பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

ஆராதிக்கின்றோம்
ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை

1. மகனாக (மகளாக) தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே

2. சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே

3. ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்

4. பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே

5. உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்

193. கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு


கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு 
கலங்கித் தவிக்காதே 
அவரே உன்னை ஆதரிப்பார் 
அதிசயம் செய்வார் 

1. நீதிமான் தள்ளாட விடமாட்டார் 
நித்தமும் காத்து நடத்திடுவார் 

2. நம்மைக் காக்கும் தேவனவர் 
நமது நிழலாய் இருக்கின்றவர் 

3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் 
அவரே நம்மை அணைத்துக் கொள்வார் 

4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது 
நமக்கு எதிராய் நிற்பவன் யார்? 

5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம் 
அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார் 

6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம் 
இதய விருப்பம் நிறைவேற்றுவார்

Thursday, July 06, 2017

190. எப்படி நான் பாடுவேன்

எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் (2)

1.இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே (2)- ஐயா

2.அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே (2) - ஐயா

3.உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன் (2)-ஐயா

4.என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தானய்யா (2) - ஐயா

5.வருகையில் எடுத்துக்  கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர் (2)- ஐயா

187. இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும

இயேசுவே என் தெய்வமே
என் மேல் மனமிரங்கும் (2)

1. நான் பாவம் செய்தேன்
உம்மை நோகச் செய்தேன் (2)
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் – 2
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே

2. உம்மை மறுதலித்தேன்
பின் வாங்கிப் போனேன் (2)
உம் வல்லமை இழந்தேனையா -2
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே

3. முள்முடி தாங்கி
ஐயா காயப்பட்டீர் (2)
நீர் எனக்காக பலியானீர் -2
உம் இரத்தத்தால் கழுவிவிடும் – 2 இயேசுவே

4. துன்ப வேளையிலே
மனம் துவண்டு போனேன் (2)
உம்மை நினையாது தூரப் போனேன் – 2
என்னை மன்னியும் தெய்வமே இந்த
ஒரு விசை மன்னியுமே – இயேசுவே

5. அநியாயம் செய்தேன்
கடும்கோபம் கொண்டேன் (2)
பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா – 2
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே

Wednesday, July 05, 2017

182. அத்திமரம் துளிர்விடாமல்

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என் தேவனுக்குள் களிகூருவேன்

ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும் வயல்களிலே தானியமின்றிப் போனாலும் ...கர்த்தருக்குள்

மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும் தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் ...கர்த்தருக்குள்

எல்லாமே எதிராக இருந்தாலும் சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் ...கர்த்தருக்குள்

உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும் ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும் ...கர்த்தருக்குள்

181. புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக்

புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம்

கழுவினார் இரத்தத்தாலே சுகம் தந்தார் காயத்தாலே தேற்றினார் வசனத்தாலே திடன் தந்தார் ஆவியாலே எனக்கு ...புதிய பாடல்

உறுதியாய் பற்றிக் கொண்டோம் உம்மையே நம்பி உள்ளோம் பூரண சமாதானம் புவிதனில் தருபவரே தினமும் ...புதிய பாடல்

அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே வல்லமையுள்ள தேவா வரங்களின் மன்னவனே எல்லா ...புதிய பாடல்

கூப்பிட்டேன் பதில் வந்தது குறைவெல்லாம் நிறைவானது மகிமையின் ராஜா அவர் மகத்துவமானவரே இயேசு ...புதிய பாடல்

மாலையில் அழுகை என்றால் காலையில் அக்களிப்பு கோபமோ ஒரு நிமிடம் கிருபையோ நித்தம் நித்தம் அவர் ...புதிய பாடல்

160. இயேசு ராஜா முன்னே செல்கிறார்

இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம் 
வேகம் சென்றிடுவோம்
ஒசன்னா ஜெயமே (2) 
ஓசன்னா ஜெயம் நமக்கே

1. அல்லேலூயா துதி மகிமை - என்றும் 
அல்லேலூயா துதி மகிமை 
இயேசு ராஜா எங்கள் ராஜா (2)
என்றென்றும் போற்றிடுவோம்
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே

2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும் 
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
கர்த்தர் நம்முடனே
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே

3. யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
மீட்பர் நம்முடனே 
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே

Tuesday, July 04, 2017

159. திருக்கரத்தால் தாங்கி என்னை

திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் வனைந்திடுமே

1. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

2. ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

3. அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே பெரிய மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்பக் கானான் தேசமதை 

158. இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியேஇயேசு அழைக்கிறார் - இயேசு அழைக்கிறார் 

சரணங்கள்1.

1.எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார் 
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால் எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் --- இயேசு

2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார் 
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்கருத்துடன் உன்னைக் காத்திடவே --- இயேசு

3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்தாமதமின்றி நீ வந்திடுவாய் --- இயேசு 

4. சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியேகிருபையாய் அன்பை அளித்திடவே --- இயேசு

157. அழகாய் நிற்கும் யார் இவர்கள்

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?

சரணங்கள்

1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ 
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் 
சிறிதானதோ பெரிதானதோ
பெற்ற பணி செய்து முடித்தோர் --- அழகாய்

2. காடு மேடு கடந்து சென்று 
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும் 
ஊக்கமாக ஜெபித்தவர்கள் --- அழகாய்

3. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் --- அழகாய்

4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் --- அழகாய்

5. வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று --- அழகாய்

6. இனி இவர்கள் பசி அடையார்
இனி இவர்கள் தாகமடையார்
வெயிலாகிலும் அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை --- அழகாய்

7. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை
அற அகற்றித் துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமே --- அழகாய்

Monday, July 03, 2017

156. தெய்வீகக் கூடாரமே - என்

தெய்வீகக் கூடாரமே - என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

1. கல்வாரி திருப்பீடமே
கறைப் போக்கும் திரு இரத்தமே
உயிருள்ள பரிசுத்த ஜீவப்பலியாக
ஒப்புக் கொடுத்தோம் ஐயா

2. ஈசோப்புல்லால் கழுவும்
இன்றே சுத்தமாவோம்
உறைகின்ற பனி போல வெண்மையாவோம் ஐயா
உம் திரு வார்த்தையினால்

3. அப்பா உம் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்

4. உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரியவிடும்

5. தூபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்

6. ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடாரத்திற்குள்
மகிமையில் நுழைந்து விட்டோம்

154. சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்


சிங்கக் குட்டிகள் பட்டினி  கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

1.   புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்

2.   எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்

3.   ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்கைத் தொடரும்

4.   என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்

153. கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு
வெற்றி உண்டு -3

1. என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்

2. என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றிப் பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன்

3. சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார்

4. பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்

5. மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்

Sunday, July 02, 2017

152. தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை என்னை

ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க
ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க

உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் பூமியிலே சமாதானமும் பிரியமும் உண்டாகட்டும் இந்தப் ...ஐயா வாழ்க

செவிகளை நீர் திறந்து விட்டீர் செய்வோம் உம் சித்தம் புவிதனிலே உம் விருப்பம் பூரணமாகட்டுமே இந்தப் ...ஐயா வாழ்க

எளிமையான எங்களையே என்றும் நினைப்பவரே ஒளிமயமே துணையாளரே உள்ளத்தின் ஆறுதலே எங்கள் ...ஐயா வாழ்க

தேடுகிற அனைவருமே மகிழ்ந்து களிகூரட்டும்
பாடுகிற யாவருமே பரிசுத்தம் ஆகட்டுமே இன்று ...ஐயா வாழ்க

குறை நீக்கும் வல்லவரே கோடி ஸ்தோத்திரமே
பாவக் கறை போக்கும் கர்த்தாவே கல்வாரி நாயகனே ...ஐயா வாழ்க