Wednesday, October 26, 2016

50 பரிசுத்தர் கூட்டம் நடுவில் ஜொலித்திடும் சுத்த ஜோதியே

பரிசுத்தர் கூட்டம் நடுவில்

பல்லவி

பரிசுத்தர் கூட்டம் நடுவில் 
ஜொலித்திடும் சுத்த ஜோதியே 
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ

சரணங்கள்

1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ? 
கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ? 
பொல்லாதோர் கூட செய்திடார் 
நற்பிதா நலம் அருளிடுவார் 

2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே 
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே 
பாவி நீச பாவி நானையா 
தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ 

3. பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை 
யாரும் காணா உள் அலங்கோலத்தை 
மனம் நொந்து மருளுகின்றேன் 
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் 

4. துணை வேண்டும் தகப்பனே உலகிலே 
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே 
என் ஜீவன் எல்லை எங்கிலும் 
பரிசுத்தம் என எழுதும் 

Tuesday, October 25, 2016

47 தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே்

Deva Kirubai Endrumullathe | தேவ கிருபை என்றுமுள்ளதே
Tags:T.P.M.

பல்லவி
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல்
கர்த்தர் தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே – தேவ

சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன் சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே – தேவ

அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட் செடி தன்னில் தோன்றிய தேவன்
பாது காத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே – தேவ

காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே – தேவ

வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே – தேவ

நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே – தேவ

Monday, October 24, 2016

46 திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே

Thiruppaatham Nambi Vanthaen | திருப்பாதம் நம்பி வந்தேன்

Tags:Sister Saral Navaroji

திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பை கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே

சரணங்கள்
இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தொரை தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன் – திருப்பாதம்

என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கணிவோடென்னை நோக்கிடுமே – திருப்பாதம்

மனம் மாற மாந்தர் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
ஏசுவே உம்மை அண்டிடுவேன் – திருப்பாதம்

என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே – திருப்பாதம்

உம்மை ஊக்கமாய் நோக்கிப்பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே – திருப்பாதம்

சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
ஏசுவே இன்று காட்டிடுமே – திருப்பாதம்

விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீரப்பாதை காட்டினீரே
வளர்ந்து கனிதரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன் – திருப்பாதம்

பலர் தள்ளின மூலைக்கல்லே
பரம சீயோன் மீதிலே
பிரகாசிக்கும் அதை நோக்கி
பதராமலே காத்திருப்பேன் – திருப்பாதம்

45 சேனையதிபன் நம் கர்த்தருக்கே செலுத்துவோம் கனமும் மகிமையும

1. சேனையதிபன் நம் கர்த்தருக்கே
செலுத்துவோம் கனமும் மகிமையுமே
அற்புதமே தம் அன்பெமக்கு – அதை
அறிந்து அகமகிழ்வோம்

ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்
ஜெயக்கீதங்கள் நாம் பாடியே
ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்
ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே

2. தாய் மறந்தாலும் நான் மறவேன்
திக்கற்றோராய் விட்டு விடேன்
என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்
என்றும் வாக்கு மாறிடாரே --- ஜெய

3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இன்பச் சத்தம் பின் சென்றிடுவோம்
இன்பப் பாதைக் காட்டிடுவார் --- ஜெய

4. சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
சாத்தானின் சேனை நடுங்கிடவே – துதி
சாற்றி ஆர்ப்பரிப்போம் --- ஜெய

5. கறை, திரை முற்றும் நீங்கிடவே
கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
வழுவாமல் காத்துக் கொள்வார் --- ஜெய

43 சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே

Santhosham Ponguthe | சந்தோஷம் பொங்குதே

Tags:Brother Michael

சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே அல்லேலூயா
இயேசு என்னை ரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

வழி தப்பி நான் திரிந்தேன்
பாவப் பழியதை சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே அழைத்தது என்னையே (2)
அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே – சந்தோஷம்

சத்துரு சோதித்திட தேவ உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார் தானே வந்து இரட்சிப்பார்
அந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே – சந்தோஷம்

பாவத்தில் ஜீவிப்பவர் பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில் நாளும் பாடல் பாடிடுவேன்
என்னில் வாழும் இயேசுவோடு என்றும் வாழுவேன் – சந்தோஷம்

42 ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே

Yaerugindraar Thallaadi | ஏறுகின்றார் தள்ளாடி

Tags:Sister Saral Navaroji

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே
என் ஏசு குருசை சுமந்தே
என்நேசர் கொல்கதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்

கன்னத்தில் அவன் ஓங்கி அறைய
சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகிறான் – ஏறுகின்றார்

மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சை பிளந்தான் ஆ! கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார் – ஏறுகின்றார்

இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசுநாதரை
நேசித்து வா குருசெடுத்தே – ஏறுகின்றார்

சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்த குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார் – ஏறுகின்றார்

பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியைப் போல கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல் – ஏறுகின்றார்

செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
சொந்த தாயின் அன்பதுவே
எருசலேமே! எருசலேமே
என்றழுதார் கண்கலங்க – ஏறுகின்றார்