கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் கலங்காதே கலங்காதே
முள்முடி உனக்காக இரத்தமெல்லாம் உனக்காக பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகி விடு - நீ பரிசுத்தமாகி விடு ...கலங்காதே
கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப் பார் கரம் விரித்து அழைக்கின்றார் கண்ணீரோடு ஓடி வா நீ ...கலங்காதே
காலமெல்லாம் உடன் இருந்து கரம்பிடித்து நடத்திச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காத்திடுவார் உன்னை ...கலங்காதே
உலகத்தின் வெளிச்சம் நீ எழுந்து ஒளி வீசு மலைமேல் உள்ள பட்டணம் தம்பி (நீ) மறைவாக இருக்காதே ...கலங்காதே
உலகம் உன்னை வெறுத்திடலாம் உற்றார் உன்னைத் துரத்திடலாம் உன்னை அழைத்தவரோ உள்ளங்கையில் ஏந்திடுவார் ...கலங்காதே
உன் நோய்கள் சுமந்து கொண்டார் உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார் நீ சுமக்கக் தேவையில்லை விசுவாசி அது போதும் ...கலங்காதே r