Saturday, August 12, 2017

432. பரலோகமே என் சொந்தமே

பரலோகமே என் சொந்தமே

பல்லவி

பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை
என்று காண்பேனோ

சரணங்கள்

1. வருத்தம் பசி தாகம் மனத்துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன்

2. சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே
அவரின் மகிமையே எனது இலட்சியமே

3. இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன் இயேசுவைப் பின்பற்றுவேன்

4. ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன்

5. பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அதில் சேர்வேன்
இராப் பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே

6. அழைப்பின் சத்தம் கேட்டு நானும் ஆயத்தமாகிடுவேன்
நாட்களும் நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே

7. பளிங்கு நதியோரம் சுத்தர் தாகம் தீர்த்திடுவார்
தூதர்கள் பாடிட தூயனை தரிசிப்பேன்

Thursday, August 10, 2017

431. உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் 

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் 
உங்கள் கவலைகள் கண்ணீர் 
எல்லாம் மறைந்து விடும் 

கலங்காதே மகனே, கலங்காதே மகளே 
என் இயேசு கைவிட மாட்டார் 

1. கடந்ததை நினைத்து கலங்காதே 
நடந்ததை மறந்துவிடு 
கர்த்தர் புதியன செய்திடுவார் 
இன்றே நீ காண்பாய்... கலங்கிடவே வேண்டாம் 

2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார் 
உடைந்த உள்ளம் தாங்குகிறார் 
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார் 
கண்ணீர் துடைகின்றார் - (உன்) 

3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட 
ஒருநாளும் விட மாட்டார் 
தாங்கிடும் பெலன் தருவார் 
தப்பி செல்ல வழி செய்வார் - (நீ) 

4. நல்லதோர் போராட்டம் போராடுவோம் 
விசுவாசம் காத்துக் கொள்வோம் 
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு 
நேசர் வருகையில் தந்திடுவார் - நம் 

5. மாலையில் மகனே அழுகின்றாயா 
காலையில் அக மகிழ்வாய் 
நித்திய பேரானந்தம் 
நேசரின் சமூகத்திலே 

6. அக்கினியின் மேல் நடந்தாலும் 
எரிந்து போக மாட்டாய் 
ஆறுகளை நீ கடந்தாலும் 
மூழ்கி போக மாட்டாய் 

7. முழுமையாய் மனம் திரும்பிவிடு 
முற்றிலும் வாழ்வை ஒப்புக்கொடு 
வேண்டாத அனைத்தையும் விட்டுவிடு 
ஆண்டவர் விருப்பம் நிறைவேற்று 
எங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் 

எங்கள் கவலைகள் கண்ணீர் 
எல்லாம் மறைந்துவிடும் 
கலங்கிடவே மாட்டோம் 
நாங்கள் கலங்கிடவே மாட்டோம்

430. இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும் தூங்காமல்

1. இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்
கண்மணி போல் என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் நிறைந்து
காலமெல்லாம் பாடுவேன் (2)

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால்

2. மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய
ஆவியால் அபிஷேகித்தார் – அஞ்சிடேன்

3. அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார்
அடல் நீக்கியவர்
அமைதிப் படுத்தினார் – அஞ்சிடேன்

Wednesday, August 09, 2017

416. இயேசு ராஜனின் திருவடிக்கு புத்தெழுச்சி

இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம்! சரணம்! சரணம்!
ஆத்மா நாதரின் மலரடிக்கு 
சரணம்! சரணம்! சரணம்!

சரணங்கள் 
பார் போற்றும் தூய தூய தேவனே,
மெய் ராஜாவே எங்கள் நாதனே ,
பயம் நீக்கும் துணை யாவும் ஆனீரே
சாரணம்! சரணம்! சரணம் !- இயேசு ராஜனின் 

இளைப்பாறுதல் தரும் வேந்தனே 
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே,
ஏழை என்னை ஆற்றித் தேற்றிக் காப்பீரே ;
சரணம்!சரணம்! சரணம்!

பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே,
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே i 
ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன் ;
சரணம்! சரணம்! சரணம்!

415. மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு

மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு
மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தபடு
அல்லேலூயா! ஆனந்தமே!
ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு ( 2)

1. மகிமையானவர் மறுரூபமானவர்
கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம்
லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே
மென்மையானவர் மகா மேன்மையுள்ளவர் – அல்லேலூயா

2. பொற்தளவீதி அது பொற்பரன் வீதி
பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே
இரத்தினங்களும் இளநீலமும்
படிகப்பச்சை மரகதமும் பாடிப்போற்றுதே – அல்லேலூயா

3. வெண்குதிரை மேல் உலாவ வருகிறார்
வெண் கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதே
வெண் சிங்காசனம் புன் சிரிக்குதே
நட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுதே – அல்லேலூயா

407. என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்


என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை , உறங்குவதுமில்லை (2)

1. என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே --- என்னை

2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும் , துருகமும் பெலன் அவரே --- என்னை

3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே
வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் --- என்னை

Tuesday, August 08, 2017

412. எந்தன் உள்ளம் புது கவியாலே போங்க

எந்தன் உள்ளம் புது கவியாலே போங்க
இயேசுவை பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்

பல்லவி
அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தரைக் கொண்டாடுவேன் – எந்தன் உள்ளம்

1. சென்ற காலம் முழுவதும் காத்தாரே – ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்

2. சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்

3. பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்

4. களிப்போடு விரைந்தேம்மை சேர்த்திட – என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினமும் காத்திருப்போம் – அல்லேலூயா – எந்தன் உள்ளம்

410. ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

1.மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்

2.இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்

3.எரிகோவின் தடைகள் எல்லாம் 
துதிகளாலே மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்

4.வியாதிகள் வறுமையெல்லாம்
விசுவாசத்தால் மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்

Monday, August 07, 2017

409. நான் சுகமானேன் (2) புண்ணியரின் காயங்களால் - நான்

நான் சுகமானேன் (2)
புண்ணியரின் காயங்களால் - நான்

ஆ... அல்லேலூயா (2) - அல்லேலூயாஆனந்தமே
ஆ... அல்லேலூயா (2) - அல்லேலூயாஆரோக்கியமே

1. பிள்ளையின் அப்பம் (2)
பிள்ளையான எனக்கல்லோ - ஆ... அல்லேலூயா

2. என் நோய்கள் தீர்த்தார் (2)
சாபமான சிலுவையில் - ஆ... அல்லேலூயா

3. நான் ஏன் சுமப்பேன் (2)
எந்தன் இயேசு சுமந்த பின் - ஆ... அல்லேலூயா

4. யேகோவா தேவன் (2)
எந்தன் நல்ல பரிகாரி - ஆ... அல்லேலூயா

5. பரி பூரண ஜீவன் (2)
பரனீந்த ஜீவனிது - ஆ... அல்லேலூயா

6. இயேசுவின் இரத்தம் (2)
பிணி போக்கும் நல் மருந்து - ஆ... அல்லேலூயா

7. பலவீனன் அல்ல (2)
பலவான் நான் தேவன் சொன்னார் - ஆ... அல்லேலூயா

8. ஆயத்தமானேன் (2)
இயேசு ராஜன் வருகைக்கு - ஆ... அல்லேலூயா

408. காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்

அனுபல்லவி

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்
பாடிடும் தொனி கேட்குதே

சரணங்கள்

1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானார்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன் --- காலையும்

2. எனக்கெதிராய் ஓர் பாளையமிறங்கி
என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன்; எதிராளி நிமித்தமாய் செவ்வையான
பாதையில் நடத்திடுவார் --- காலையும்

3. ஒன்றை நான் கேட்டேன் , அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்து நாடிடுவேன் --- காலையும்

4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து
உயர்த்துவார் கன்மலைமேல் --- காலையும்

5. எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று
என் கர்த்தர் சொன்னதினாலே
தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு
தயவாகப் பதிலளிப்பார் --- காலையும்

6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார்
எந்தன் உள்ளம் ஸ்திரமாகத் திடமாகக் கர்த்தருக்கே
என்றென்றும் காத்திருக்கும் --- காலையும்

7. எனக்காக யாவும் செய்து முடிப்பார்
என் கர்த்தர் வாக்கு மாறிடார்
தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர் விருப்பமும்
தவறாமல் நிறைவேற்றுவார் --- காலையும்

Sunday, August 06, 2017

406.தேவனின் ஆலயமே பரிசுத்தஆலயமே

தேவனின் ஆலயமே பரிசுத்தஆலயமே
மகிமையின் ஆலயமே நாமேஅவ்வாலயமே

1.இயேசுவின் இரத்தத்தால்மீட்கப்பட்டோம்
அவருக்காய் கிரயமாய்கொள்ளப்பட்டோம்
தேவனின் ஆவியால்நிரப்பப்பட்டோம் நாம்
தேவபிள்ளைகளானோம் அவர்சொந்த ஜனமானோம்

2.நாம் இனி நம்முடையவர்களல்ல
அவரே சரீரத்தின் சொந்தமானவர்
வஞ்சிக்கப்படாமல்  ட்டுப்படுத்தப்படாமல்
பரிசுத்தம் காத்துக்கொள்வோம்பரிசுத்த ஜாதியாக

3.கர்த்தருக்குள் என்றும்இசைந்திருப்போம்
அவருடன் ஒரே ஆவியாயிருப்போம்
ஆவியினாலும் சரீரத்தினாலும்
மகிமை செலுத்திடுவோம்கர்த்தருக்கே என்றும்

4.இயேசுவின் வருகைநெருங்கிடுதே
அவரின் பிரசன்னம்விரைந்தேகிடுதே
மகிமைமேல் மகிமைஅடைந்தேகிடுவோம்
நாம் மறுரூபமாகிடுவோம்
மகிமையில் சேர்ந்திடுவோம்