Monday, October 16, 2017

92. வாரும் ஐயா போதகரே வந்தெம்மிடம

1. வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம் – வாரும்

2. ஒளிமங்கி இருளாச்சே
உத்தமனே, வாரும் ஐயா
கழுத்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய் – வாரும்

3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே, நலம் தருவாய் – வாரும்

4. உன்றன் மனை திருச்சபையை
உலக மெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்யம் அளித் தாண்டருள்வாய் – வாரும்

5. ஆதரையிலென் ஆறுதலே
அன்பருக்குச் சதா உறவே
பேதையர்க்குப் பேரறிவே
பாதை மெய் ஜீவ சற்குருவே – வாரும்

91. நம்பி வந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே

நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே – திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே

1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே – நான்

5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான்

Friday, October 13, 2017

80. ஏசுவையே துதிசெய், நீ மனமே

ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் - கிறிஸ் தேசுவையே

சரணங்கள்

ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் - கிறிஸ் தேசுவையே

1. மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து --- ஏசுவையே

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் --- ஏசுவையே

3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க --- ஏசுவையே

Saturday, September 23, 2017

500. ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிஜனம் இருந்தாலும்

ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட (இயேசுவைப்போல்)
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே

நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க
என்னைவிட்டு க்கொடுக்கலயே……
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே

காசு பணம் இல்லாம
முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே

நான் உடஞ்சு போயி கிடந்து
நான் நொருக்கபட்டு கிடந்து
என்னை ஒட்டி சேர்க்க
நீங்க வந்ததது நான் மறக்கலையே
என் கண்ணீரை துடைத்துவிட்டத
நான் மறக்கலையே

Friday, September 22, 2017

29. ஆனந்தமாய் இன்பக்

ஆனந்தமாய் இன்பக் கானான்பல்லவிஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் 
அனுபல்லவிநாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்நாதன் இயேசு என்னோடிருப்பார் 

சரணங்கள்
1. சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியைக்கண்டு நன்றியுடன் பாடிடுவேன் --- ஆனந்தமாய்

2. வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன் வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார்எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன் --- ஆனந்தமாய்

3. கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்இயேசு அல்லால் ஆசை இப்பூவினில் வேறே இல்லைஎன்றும் எனக்கவர் ஆதரவே --- ஆனந்தமாய் 

4. உம்மைப் பின் சென்று ஊழியம் செய்துஉம்பாதம் சேர வாஞ்சிக்கிறேன்தாரும் தேவா ஏழைக்கும் மாறாத உம் கிருபைகண் பாரும் என்றும் நான் உம் அடிமை --- ஆனந்தமாய்

5. தேற்றிடுதே உம் வாக்குகள் என்னைஆற்றிடுதே உந்தன் சமூகமேபெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன் --- ஆனந்தமாய்

Thursday, September 07, 2017

489. எந்தன் கன்மலை ஆனவரே என்னை காக்கும் தெய்வம் நீரே

எந்தன் கன்மலை ஆனவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே

ஆராதனை உமக்கே (4)

உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே

ஆராதனை உமக்கே (4)

எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயம் இல்லையே

ஆராதனை உமக்கே (4)

எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணி துதித்திடுவேன்

ஆராதனை உமக்கே (4)

Wednesday, September 06, 2017

484. எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்

1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன்

2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே

3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை
மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா

4. நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே காத்திருப்பேன்
கண்ணீர் ஜெபம் கேளுமே கருணையின் பிரவாகம் நீரே

481. அன்பே! அன்பே! அன்பே!  ஆருயிர் உறவே, 

அன்பே! அன்பே! அன்பே! 
ஆருயிர் உறவே, 
ஆனந்தம்! ஆனந்தமே! 

1. ஒருநாள் உம்தயை கண்டேனையா, 
அந்நாளென்னை வெறுத்தேனையா, 
உம் தயை பெரிதையா - என்மேல் 
உம் தயை பெரிதையா. 

2. பரலோகத்தின் அருமைப் பொருளே, 
நரலோகரிலன்பேனையா? 
ஆழம் அறிவேனோ - அன்பின் 
ஆழம் அறிவேனோ? 

3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா 
மறந்தே திரிந்த துரோகியை 
அணைத்தீர் அன்பாலே - எனையும் 
அணைத்தீர் அன்பாலே. 

4. பரலோகத்தின் பொருளின் மகிமை 
அழியும் புல்லின் பூவைப்போல் 
வாடாதே ஐயா - அன்பு 
வாடாதே ஐயா. 

5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை 
இயம்பற்கியலாதாகில் யான் 
இசைக்கவும் எளிதாமோ - பரத்தில் 
இசைக்கவும் எளிதாமோ! 

Tuesday, September 05, 2017

480. கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே

கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே

விலையேறப் பெற்ற திருரத்தமே – அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற
விலையாக ஈந்தனரே

1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கினையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே

2. சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே

3. எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பிதையே
சிந்தித்தே சேவை செய்வேன்

4. மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணிலவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே

Monday, September 04, 2017

479.தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே

தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே
துதிகள் நடுவே கர்த்தர் தங்க
தூதர் சேனை தம்மகிமையோடிறங்க

1.எழும்பு சீயோனே ஒளி வந்ததே
 எரிந்திடும் விளக்கே திருச்சபையே
காரிருளே கடந்திடுதே
கர்த்தரின் பேரொளி வீசிடுதே

2.நலமுடன் நம்மை இதுவரையும்
நிலைநிறுத்திடுதே அவர் கிருபை
கண்மணிபோல் கடைசி வரை
காத்திடும் பரமனைவாழ்த்திடுவோம்

3.குறித்திடும் வேளைஉயர்த்திடுவார்
கிறிஸ்துவின் கரத்தில்அடங்கிடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தவரை
வாழ்வினில் துதித்திடவாய்திறப்போம்

4.தெரிந்தெடுத்தார் தம்மகிமைக்கென்றே
பரிந்துரைத்திடுவார் நாம்பிழைத்திடுவோம்
இரட்சிப்பினால் அலங்கரித்தார்
இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம்

5.பெருந்தொனி கேட்க ஏறிடுவோம்
பரலோகந் திறந்தே அவர் வருவார்
உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில்
என்றென்றும் அவருடன்வாழ்ந்திடுவோம்

478. சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம்;ஆதி

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம்;ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்.

அனுபல்லவி
பாரேறு நீதனுக்கு ,பரம பொற்பாதனுக்கு ,
நேரேறு போதனுக்கு,நித்திய சங்கீதனுக்கு . -சீர்

அனுபல்லவி

ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் ;
அகிலப் பிரகாசனுக்கு,நேசனுக்கு மங்களம் ;
நீதிபரன் பாலனுக்கு ,நித்திய குணாளனுக்கு,
ஓதும் அனுகூலனுக்கு ,உயர் மனுவேலனுக்கு ;-சீர்

மானாபி மானனுக்கு, வானனுக்கு மங்களம் ;
வளர் கலைக் கியானனுக்கு , ஞானனுக்கு மங்களம் ;
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு,
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு . -சீர்

பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் ;
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் ;
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு ,
பத்தர் உபகாரனுக்குப்            பரம குமாரனுக்கு ,- சீர்

Friday, August 25, 2017

476. துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!

சரணங்கள்

1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் --- துதி

2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் --- துதி

3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார்,
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் --- துதி

4. ஆபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்,
எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் --- துதி

5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்,
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் --- துதி

6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்,
பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் --- துதி

472.ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்துபாடிடுவோம்

ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்துபாடிடுவோம்

வல்ல இயேசு நல் தேவன்என்றென்றும் அவர் நம் தேவன்

1.தேவ வாசஸ்தலம் என்றும்இன்பமானதே

மகிமை தேவன் கிறிஸ்து இயேசுபிரசன்னம் இங்கே

மகிமை மகிமையே! என் மனம்பாடுதே மக்கள் மத்தியில்

என் மகிழ்ச்சி பொங்குதே!

2.சீயோன் பெலனே! வெற்றிசிகரமே!

சேனைகளின் கர்த்தர் இயேசுகிரியை செய்கிறார்

ஜீவன் பெலனும் ஆசீர்வாதமேநித்திய ஜீவன்

இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே!

3. கர்த்தர் சமூகம் என் வாழ்வின்மேன்மையே

கர்த்தர் இயேசு ராஜன் என்றும்உயர்ந்து நிற்கிறார்

அல்லேலூயா என் ஆவி பாடுதேஆராதனை

அழகு என்னை கவர்ந்துகொண்டதே!

4.தேவ சாயல் சபையில் தோன்றுதே

தேவர் நடுவில் இயேசு நியாயம்செய்கிறார்

தேவ சேவையே என் கெம்பீர சேவை

தேவாவியில் நிறைந்துஆடிப்பாடுவேன்

Wednesday, August 23, 2017

469. ஆராதனை நாயகன் நீரே

ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன்

சரணங்கள்

1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசுவிலே
விடிவெள்ளியே என்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் --- ஆராதனை

2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே
முழங்கால் யாவுமே முடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடவே --- ஆராதனை

3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர்
ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் -- ஆராதனை

467. அழைக்கிறார் அழைக்கிறார்

அழைக்கிறார் அழைக்கிறார் இதோபல்லவி அழைக்கிறார் அழைக்கிறார் இதோநீயும் வா உந்தன் நேசர்ஆவலாய் அழைக்கிறார் - இதோ 
சரணங்கள்
1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர் கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியேகண்டிடும் , வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும் --- அழைக்கிறார்

2. நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர் நேசர் உந்தன் நோய்களை நிச்சயமாய் தீர்த்தாரேநோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார் --- அழைக்கிறார்

3. துன்பம் சகித்தவர் , துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே அண்ணல் யேசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே துரிதமாக வாராயோ --- அழைக்கிறார் 

4. அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்
சொந்தமாகச் சேர்ந்திட இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ --- அழைக்கிறார்

5. கல்லறைத் திறக்கக் காவலர் நடுங்க
கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் , ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே --- அழைக்கிறார்

6. சாந்த சொரூபனே ! சத்திய வாசனே !
வஞ்சமற்ற வாயனே வந்தணைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே தந்துனை அழைக்கிறார் --- அழைக்கிறார்

Tuesday, August 22, 2017

466. மேகமீதில் இயேசு ராஜன்

மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க அவரே வாராரே மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே - 2

ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாறாரே
மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் -
மேகமீதில்

கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் கிளம்பியே எழும்பிடுவார் மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே -மேகமீதில்

பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே பாடுபட்டவர்தாமே
கூடும் நமக்கோ குறைவில்லா பலனை கூவியே கொடுத்திடுவார் -மேகமீதில்

அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கின்றதே
அவர் வரும் வேளையை எவருமே அறியார் ஆண்டவரே அறிவார் -மேகமீதில்

ஆயிரமாயிரம் அவரது வசனங்கள் அதை அறிவிக்கின்றதே அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளெல்லாம் அதையே அறிவிக்கின்றார் -மேகமீதில்

Monday, August 21, 2017

463. ஜீவனுள்ள தேவனே வாரும்

1.ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும் 
ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும் 

தேவனே நீர் பெரியவர் தேவனே நீர் பரிசுத்தர்
தேவனே நீர் நல்லவர் தேவனே நீர் வல்லவர்

2.பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ

3.ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயம் ஏற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர்

4.வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்

5.நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வரக் காலமாகுதே
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ

Sunday, August 20, 2017

456. ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை

வாழ்த்தி வணங்கிடுவேன்

1.அற்புதமான அன்பே - என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே - ஸ்தோத்தி

2.ஜோதியாய் வந்த அன்பே - பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே - ஸ்தோத்தி

3.மாய உலக அன்பை - நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே - ஸ்தோத்தி

4.ஆதரவான அன்பே - நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னத மா தேவ அன்பே
உள்ளங் கவரும் அன்பே - ஸ்தோத்தி

5.வாக்கு மாறாத அன்பே - திரு
வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே - ஸ்தோத்தி

453. அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்

  முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
  முழு பெலத்தோடு அன்பு கூறுவென்
     ஆராதனை ஆராதனை - 2

1. எபிநெசரே எபிநெசரே
  இதுவரையில் உதவினீரே ‍ உம்மை

2. எல்ரோயீ எல்ரோயீ
  என்னைக் கண்டீரே நன்றி ஐயா - உம்மை

3. யோகோவா ராப்பா யோகோவா ராப்பா
  சுகம்தந்தீரே நன்றி ஐயா – உம்மை

455. கோடாகோடி ஸ்தோத்திரம்

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

1. பரிசுத்தவான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே
அல்லேலுயா அல்லேலுயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம்

2. கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
அல்லேலுயா அல்லேலுயா
கண்டேன் சகாயம் இரக்கமே
கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே

3. குருவி பறவை வானம்பாடியே
கவலையின்றிப் பறந்து பாடுதே
அல்லேலுயா அல்லேலுயா
அற்புதமான சிருஷ்டிகரே
அந்த விசுவாசம் கற்றறிந்தோம்

4. கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
அல்லேலுயா அல்லேலுயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர்

5. கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலுயா அல்லேலுயா
தேவ குமாரன் வந்திடும் நாள்
துய முகம் கண்டு கெம்பீரிப்போம்

Monday, August 14, 2017

452. தூயாதி தூயவரே உமது புகழை

தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன் 
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் 
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் - தூயாதி 

1. சீடரின் கால்களைக் கழுவினவர் 
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! 

2. பாரோரின் நோய்களை நீக்கினவர் 
பாவி என் பாவ நோய் நீக்கினீரே! 

3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே 
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே! 

4. பரலோகில் இடமுண்டு என்றவரே 
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே

442. உங்க கிருபை தான் என்னைத்

உங்க கிருபை தான்
என்னைத் தாங்குகின்றது
உங்க கிருபை தான்
என்னை நடத்துகின்றது

கிருபையே கிருபையே
மாறாத நல்ல கிருபையே

1.உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது

2.சோர்ந்து போன நேரத்தில் எல்லாம்
என்னை சூழ்ந்து கொண்ட கிருபை இது

3.ஒன்றுமில்லா நேரத்தில் எல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது

4.ஊழியத்தின் பாதையில் எல்லாம்
என்னை உயர்த்தி வைத்தக் கிருபை இது

Sunday, August 13, 2017

434. இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு (2) 

1. உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை 
ஏழை இல்லை பணக்காரனில்லை 
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார் --- இயேசுவின்

2. பாவமில்லை அங்கு சாபமில்லை 
வியாதியில்லை கடும் பசியுமில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார் --- இயேசுவின்

3. இன்பம் உண்டு சமாதானம் உண்டு
வெற்றி உண்டு துதி பாடல் உண்டு
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார் --- இயேசுவின்

436. கர்த்தரின் கை குறுகவில்லை

1. கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே

பல்லவி

விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்

2. திருச்சபையே நீ கிரியை செய்வாய்
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே

3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஜனத்தை சீக்கிரமாய்
தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே

4. மேகம் போன்ற வாக்குத்தத்தம்
சூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே

Saturday, August 12, 2017

432. பரலோகமே என் சொந்தமே

பரலோகமே என் சொந்தமே

பல்லவி

பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை
என்று காண்பேனோ

சரணங்கள்

1. வருத்தம் பசி தாகம் மனத்துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன்

2. சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே
அவரின் மகிமையே எனது இலட்சியமே

3. இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன் இயேசுவைப் பின்பற்றுவேன்

4. ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன்

5. பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அதில் சேர்வேன்
இராப் பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே

6. அழைப்பின் சத்தம் கேட்டு நானும் ஆயத்தமாகிடுவேன்
நாட்களும் நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே

7. பளிங்கு நதியோரம் சுத்தர் தாகம் தீர்த்திடுவார்
தூதர்கள் பாடிட தூயனை தரிசிப்பேன்

Thursday, August 10, 2017

431. உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் 

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் 
உங்கள் கவலைகள் கண்ணீர் 
எல்லாம் மறைந்து விடும் 

கலங்காதே மகனே, கலங்காதே மகளே 
என் இயேசு கைவிட மாட்டார் 

1. கடந்ததை நினைத்து கலங்காதே 
நடந்ததை மறந்துவிடு 
கர்த்தர் புதியன செய்திடுவார் 
இன்றே நீ காண்பாய்... கலங்கிடவே வேண்டாம் 

2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார் 
உடைந்த உள்ளம் தாங்குகிறார் 
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார் 
கண்ணீர் துடைகின்றார் - (உன்) 

3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட 
ஒருநாளும் விட மாட்டார் 
தாங்கிடும் பெலன் தருவார் 
தப்பி செல்ல வழி செய்வார் - (நீ) 

4. நல்லதோர் போராட்டம் போராடுவோம் 
விசுவாசம் காத்துக் கொள்வோம் 
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு 
நேசர் வருகையில் தந்திடுவார் - நம் 

5. மாலையில் மகனே அழுகின்றாயா 
காலையில் அக மகிழ்வாய் 
நித்திய பேரானந்தம் 
நேசரின் சமூகத்திலே 

6. அக்கினியின் மேல் நடந்தாலும் 
எரிந்து போக மாட்டாய் 
ஆறுகளை நீ கடந்தாலும் 
மூழ்கி போக மாட்டாய் 

7. முழுமையாய் மனம் திரும்பிவிடு 
முற்றிலும் வாழ்வை ஒப்புக்கொடு 
வேண்டாத அனைத்தையும் விட்டுவிடு 
ஆண்டவர் விருப்பம் நிறைவேற்று 
எங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் 

எங்கள் கவலைகள் கண்ணீர் 
எல்லாம் மறைந்துவிடும் 
கலங்கிடவே மாட்டோம் 
நாங்கள் கலங்கிடவே மாட்டோம்

430. இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும் தூங்காமல்

1. இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்
கண்மணி போல் என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் நிறைந்து
காலமெல்லாம் பாடுவேன் (2)

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால்

2. மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய
ஆவியால் அபிஷேகித்தார் – அஞ்சிடேன்

3. அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார்
அடல் நீக்கியவர்
அமைதிப் படுத்தினார் – அஞ்சிடேன்