Saturday, October 15, 2016

23 அடைக்கலமே உமதடிமை நான

அடைக்கலமே உமதடிமை நானே
பல்லவி
அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே

சரணங்கள்
1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபா
பாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே --- ஆ

2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே --- ஆ

3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனைக் காட்டுபவரே
நம்பி வந்தோனைக் கிருபை சூழ்ந்துக்கொள்ளுதே --- ஆ

4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே
அழுகையைக் களிப்பாக மாற்றி விட்டீரே --- ஆ

5. பாவங்களைப் பாராதென்னைப் பற்றிக் கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சணியத்தின் சந்தோஷத்தை திரும்பத் தந்தீரே
உற்சாக ஆவி என்னைத் தாங்கச் செய்தீரே --- ஆ

Friday, October 14, 2016

21 உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்

உறக்கம் தெளிவோம்
உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதிவரை
கல்வாரி தொனிதான் மழை மாரிப் பொழியும்
நாள்வரை உழைத்திடுவோம்!

அசுத்த்ம் கழைவோம் அன்பை அழைப்போம்
ஆவியில் அனலும் கொள்வோம்
அவர் படை ஜெயிக்க ந்ம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம்!

அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்
சரித்திரம் சாட்சி கூறும்
இரத்த்ச் சாட்சிகள் நம்மிடைத் தோன்றி
நாதனுக்காய் மடிவோம்!

கிறிஸ்துவுக்காக இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை
இராஜ்ஜிய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர்
ந்ஷ்ட்டப்பட்டதில்லை!

உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்
உலர்ந்த எலும்புகளே
நீங்கள் அறியா ஒருவர் உங்கள்
நடுவில் வந்துவிட்டார்.

20 தேவ சாயல் ஆகா மாறி தேவனோடிருப்பேன் – நானும்

Deva Saayal Aaga Maari | தேவ சாயல் ஆக மாறி
Tags:Sister Saral Navaroji

தேவ சாயல் ஆகா மாறி
தேவனோடிருப்பேன் – நானும்

சரணங்கள்
அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் கலைந்தே தம்
விண்ணவர் சாயல் அடைவேன் – தேவ

பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கைவேலை யல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன் – தேவ

சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலனடைய
ஆற்றி தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார் – தேவ

ஆவியின் அச்சார மீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே – தேவ

காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவ யாத்திரை ஓடி முடித்து
ஜீவக் கிரீடம் பெற்றிடுவேன் – தேவ

மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே – தேவ

உன்னத சீயோன் மலைமேல்
என் அருமை ஏசுவுடன்
ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்
ஜீவிப்பேனே நீடுழிவாய் – தேவ

19. எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்


எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

பல்லவி

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

சரணங்கள்

1. ஆதியும் நீரே - அந்தமும் நீரே
ஜோதியும் நீரே - என் சொந்தமும் நேரே ---எந்த

2. தாய் தந்தை நீரே தாதியும் நீரே
தாபரம் நீரே - என் தாரகம் நீரே --- எந்த

3. வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
வாதையில் நீரே - என் பாதையில் நீரே

4. வானிலும் நீரே பூவிலும் நீரே
ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே --- எந்த

5. துன்ப நேரத்தில் இன்பமும் நேரே
இன்னல் வேளையில் - என் மாறிடா நேசர் --- எந்த

6. ஞான வைத்தியராம் - ஔஷதம் நீரே
ஆத்ம நேசராம் - என் நண்பரும் நீரே --- எந்த

7. ஞானமும் நீரே - தானமும் நீரே
நியாமமும் நேரே - என் நாதனும் நீரே ---- எந்த

8. ஆறுதல் நீரே - ஆதாரம் நீரே
ஆசையும் நீரே - என் ஆனந்தம் நீரே --- எந்த

9. மீட்பரும் நீரே - என் மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே - என் மகிமையும் நீரே --- எந்த

10. தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே
ராஜ ராஜனும் - என் சர்வமும் நீரே --- எந்த

15. பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே

பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே
பாவியெனக்காய் வேண்டுதல்
செய்திடும் சத்தம் தொனித்திடுதே

1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே – பாரீர்

2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே – பாரீர்

3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர்

4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே – பாரீர்

5. அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் – பாரீர்

6. என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை
எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன் – பாரீர்

14.போற்றி துதிப்போம் எம் தேவ தேவன

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்போம் - (2)

. இயேசு என்னும் நாமமே என்
  ஆத்துமாவின் கீதமே-என் நேசர் இயேசுவை
  நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் - (2)

1. கோர பயங்கரமான புயலில்
  கொடிய அலையின் மத்தியில் - (2)
  காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர;த்தணைத்து
  அன்பை என்றும் பாடுவேன் - (இயேசு)

2. தாய் தன் பாலகனையே மறப்பினும்
  நான் மறவேன் என்று சொன்னதால்  - (2)
  தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
  ஜீவ பாதை என்றும் ஓடுவேன் - (இயேசு)

3. பூமியகிலமும் சாட்சியாகவே
  போங்களென்ற சாட்சியாகவே
  ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
  என்றும் தொண்டு செய்குவேன் - (இயேசு)

Wednesday, October 12, 2016

13. காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்க

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் உன்னைக்காக்கவல்லோர்
காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே

2. ஐயம் மிருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான்
மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்கவல்லோர்

3. என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார்

12 வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

Varuvaay Tharunamithuvae | வருவாய் தருணமிதுவே

Tags:Sister Saral Navaroji

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார் – வருவாய்

கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவிட்டு உன் ஆவி போனால்
கூட உன்னோடு வருவதில்லை – வருவாய்

அழகும் மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர் நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை – வருவாய்

வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமம் அல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே – வருவாய்

தீராத பாவம், வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக் குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களால் நீ குணமடைய – வருவாய்

சத்திய வாக்கை நம்பியே வா
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
உன் பெயரை ஜீவா புஸ்தகத்தில்
உண்மையாய் இன்று எழுதிடுவார் – வருவாய்

11 பலிபீடத்தில் என்னைப் பரனே படைக்கிறேனே இந்த வேள

பலிபீடத்தில் என்னைப் பரனே

1. பலிபீடத்தில் என்னைப் பரனே 
படைக்கிறேனே இந்த வேளை 
அடியேனை திருச்சித்தம் போல 
ஆண்டு நடத்திடுமே

பல்லவி

கல்வாரியின் அன்பினையே 
கண்டு விரைந்தோடி வந்தேன் 
கழுவும் உம் திரு இரத்தத்தாலே 
கரை நீங்க இருதயத்தை

2. நீரன்றி என்னாலே பாரில் 
ஏதும் நான் செய்திட இயலேன் 
சேர்ப்பீரே வழுவாது என்னைக் 
காத்துமக்காய் நிறுத்தி --- கல்வாரியின் 

3. ஆவியோடாத்மா சரீரம் 
அன்பரே உமக்கென்றும் ஈந்தேன் 
ஆலய மாக்கியே இப்போது
ஆசீர்வதித்தருளும் --- கல்வாரியின் 

4. சுயம்மென்னில் சாம்பலாய் மாற 
சுத்தாவியே அனல் மூட்டும் 
ஜெயம் பெற்று மாமிசம் மாய 
தேவா அருள் செய்குவீர் --- கல்வாரியின் 

5. பொன்னையும் பொருளையும் விரும்பேன் 
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன் 
மன்னவன் இயேசுவின் சாயல் 
இந்நிலத்தில் கண்டதால் --- கல்வாரியின் 

10 தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ, சிறுமை தாழ்ச்சி அடைகிலனே .

தேவ பிதா என்றன் மேய்ப்பன்

பல்லவி

தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ, 
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே

அனுபல்லவி

ஆவலதாய் எனைப் பைம்புன்மேல் 
அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் --- தேவ

சரணங்கள்

1. ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி 
அடியேன் கால்களை நீதி என்னும் 
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம் 
நிதமும் சுகமாய் நடத்துகின்றார் --- தேவ 

2. சா நிழல்பள்ளத் திறங்கிடினும், 
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என் னோடிருப்பார் 
வளை தடியும் கோலுமே தேற்றும் --- தேவ 

3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி 
பாங்காய் எனக்கென் றேற்படுத்திச் 
சுக தயிலம் கொண்டென் தலையைச் 
சுபமாய் அபிஷேகம் செய்குவார் --- தேவ 

4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம் 
அருளும் நலமுமாய் நிரம்பும்,
நேயன் வீட்டினில் சிறப்போடே 
நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன் --- தேவ

09 நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார

நான் நேசிக்கும் தேவன் இயேசு

நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2 )

நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன்

1.கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
படகாய் வந்திடுவார்
இருள்தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார்

2.பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவர் ஆகிடுவார்
மயங்கி விழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார் 

3.தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனைத்
தேற்றிட வந்திடுவார்
கால் தளரும் வேளையிலே
ஊன்று கோலாகிடுவார் 

4.நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனிக் கலங்கிடேனே
எந்தனுக்குக் காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே

No.8 துதித்துப் பாடிட பாத்திரமே

1.
துதித்துப் பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
துயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே

ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே
நாம் அல்லேலுயா துதி சாற்றிடுவோம்

2.
கடந்த நாட்களில் கண்மணிபோல்
கருத்துடன் நம்மைக் காத்தாரே
கர்த்தரையே நம்பி ஜவித்திட
கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே – ஆ!

3.
அக்கினி ஊடாய் நடந்தாலும்
ஆழியில் தண்ணரைக் கடந்தாலும்
சோதனையோ மிகப் பெருகினாலும்
ஜெயம் நமக்கந்ததால் ஸ்தோத்தரிப்போமே – ஆ!

4.
இந்த வனாந்தர யாத்திரையில்
இன்பராம் இயேசு நம்மோடிருப்பார்
போகையிலும் நம் வருகையிலும்
புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே – ஆ!

5.
வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார்
வாரும் என்றே நாம் அழைத்திடுவோம்
வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள்
விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே – ஆ!

No.7 Deva Siththam Niraivaera | தேவ சித்தம் நிறைவேற

Deva Siththam Niraivaera | தேவ சித்தம் நிறைவேற

Tags:Sister Saral Navaroji

தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே

முட்களுக்குள் மலர்கின்றதோர்
மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்
என்னையுமே அவர் சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார்

பொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்குவேனென்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலனளிப்பார்

அத்தி மரம் துளிர் விடாமல்
ஆஸ்திகள் அழிந்து நஷ்டம் வந்தாலும்
கர்த்தருக்குள் சந்தோஷமாய்
நித்தமும் மகிழ்ந்திடுவேன்

நீதிமானை அனுதினமும்
சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும்
கர்த்தர் அன்பை விட்டு நீங்கா
சுத்தனாய் நிலைத்திருப்பேன்

முன்னறிந்து அழைத்தவரே
முன்னின்று நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக் கென்றே
சாட்சியாய் முடித்திடுவார்

சோதனையை சகிப்பவனே
சாந்தமும் பொறுமையு முள்ளவனே
ஜீவக்கிரீடம் பெற்றிடுவான்
ஜோதியாய் பிரகாசிப்பான்

கஷ்டமெல்லாம் தொலையும் ஊர் நாள்
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
இரட்டிப்பான பங்கைப் பெற
இரட்சகர் அழைத்திடுவார்

No.5 இன்ப இயேசு ராஜாவை நான்

1. இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் (2)

2. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2)
கறை திறை அற்றப் பரிசுத்தரோடு
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)

3. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும்போது (2)
அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2)

4. முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2)
வாரினால் அடிக்கப்பட்ட முதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன் (2)

5. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2)

6. ஆகா எக்காளம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்ந்திடுமோ (2)
அப்பா என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளம் (2)

No.4 என்னை மறவா இயேசு நாதா

Ennai Marava Yesu Natha
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமதே

2. பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை

3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே

4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே

5. என்னை முற்றும் ஒப்புவித்தேன்
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடும்.

6. திக்கற்றோராய்க் கைவிடேனே
கலங்கிடீரே என்றதாலே, ஸ்தோத்திரம்!
நீர் அறியா தேதும் நேரிடா
என் தலைமுடியும் எண்ணினீரே. - என்னை

No.3 கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

பல்லவி

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு!
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு! 
அல்லேலூயா! அல்லேலூயா! (2)

சரணங்கள்

1. பாவத்தின் சுமையகற்றி --- கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) --- கர்த்தாவின்

2. நீதியின் பாதையிலே --- அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்!
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) --- கர்த்தாவின்

3. மறுமையின் வாழ்வினிலே --- இயேசு
மன்னவன் பாதத்திலே
பசிதாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) --- கர்த்தாவின்

Tuesday, October 11, 2016

Thuthippen Thuthippen Thuthippen

1.
Thuthippen Thuthippen Thuthippen | துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
கால காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளவும் துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மீது அன்பைச் சொரிந்து
என்னை மீட்டு காத்து நடத்திய
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்

நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைத் தேற்றி அன்பு கூர்ந்த
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்

வாழ்விலே உம்மை நான் ஏற்றிடவே
தாழ்விலும் என்னை நீர் தாங்கிடவே
ஏழை நானே பாதம் பணிந்து
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்

Tamil Gospel songs lyrics

Song index

1 துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
கால காலமெல்லாம் என்னைக் காத்தவரை

3 கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

04 என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்.

05 இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்

07 தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்

08 துதித்துப் பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே

09 நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்

010 தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ, சிறுமை தாழ்ச்சி அடைகிலனே .

011 பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை

12 வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

13. காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே

14 போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே

15 பாரீர் கெத்சமனே
பூங்காவிலென் நேசரையே

19 எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

20 தேவ சாயல் ஆகா மாறி
தேவனோடிருப்பேன் – நானும்

21 உறக்கம் தெளிவோம்
உற்சாகம் கொள்வோம்

23 அடைக்கலமே உமதடிமை நானே

25 சாலேமின் ராசா சங்கையின் ராசா சுவாமி வாருமேன் – இந்தத்

26 அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

27 அல்லேலூயா கர்த்தரையே

29 ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்

30 இயேசுவின் நாமம் இனிதான நாமம்

31 இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே

32 இயேசுவே உம் நாமத்தினால்

33 இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

34 உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

35 உன்னதமானவரின் - உயர் மறைவிலிருக்கிறவன்

36 எனக்காய் ஜீவன் விட்டவரே

37 என்ன என் ஆனந்தம், என்ன என் ஆனந்தம்

38 எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

39 எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார் (2)

40 என் நேசர் ஏசுவின் மேல் சாய்ந்தே
துன்ப வனாந்திரத்தில் நடந்திட

41 எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்

42 ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே

43 சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே

45 சேனையதிபன் நம் கர்த்தருக்கே
செலுத்துவோம் கனமும் மகிமையுமே

46 திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே

47  தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே்

50 பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே

52 பூரண ஆசீர் பொழிந்திடுமே
பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே

53 மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம்

54 மேகங்கள் நடுவே வழி பிறக்கும்
பூதங்கள் கடந்து கடந்து வரும்

55 ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா

56 ஸ்தோத்திரம் இயேசு நாதா
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா

57 ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்

58 வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா

73  சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!

75 கண்களை ஏறெடுப்பேன்  மாமேருநேராய் என்

76 பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே - இன்னும்

77 ஆர் இவர் ஆராரோ -இந்த -அவனியோர் மாதிடமே

78 ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,

79 ஆத்துமமே , என் முழு உள்ளமே - உன்

80 இயேசுவையே துதி செய் நீ மனமே
இயேசுவையே துதி செய்

85 தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்

87 நீயுனக்கு சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி

89  இயேசுவே கிருபாசனப்பதியே கெட்ட

92 தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்

93 வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்

95 எல்லாம் இயேசுவே - எனக்கெல்லா மேசுவே

96 தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

97 தந்தானைத் துதிப்போமே - திருச்
சபையாரே, கவி - பாடிப்பாடி.

100 எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே , நீ

112 தோத்திரம் செய்வேனே - ரட்சகனைத்

113 - கால் மிதிக்கும் தேசமெல்லாம்

115  - ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர்

116 - நன்றியால் துதிபாடு நம் இயேசுவை

118 - இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்

120 - நான் உன்னை விட்டு விலகுவதில்லை

121 - எப்படி பாடுவேன் நான் - என்
இயேசு எனக்கு செய்ததை

122 - எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

123 - ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே

125 - கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்

126

127 - நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்

129 - குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்தில்

130 - உதவி வரும் கன்மலை
நோக்கிப் பார்க்கின்றேன்

131 - நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்                                                                   நாதா நான் உம்மைத் துதிப்பேன்

132 - கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்

133. வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம் வீரநடை நடந்திடுவோம்

134. என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்

136
கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்

137. இரத்த கோட்டைக்குள்ளே
நான் நுழைந்து விட்டேன்

139. அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே

142 ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கொடி கொடி ஸ்தோத்திரம்

143  விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்

144 அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்

145 தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்

146 என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்

147 ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் -

148 நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தாரே

149 தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்

150 தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே  ஆராதிக்கின்றேன்

151 மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா

152 தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை

153 கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு

154 சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு

156 தெய்வீகக் கூடாரமே - என்
தேவனின் சந்நிதியே 

157 அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?

158 இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்

159  திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே

160 இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்

181 புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

182 அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

187 இயேசுவே என் தெய்வமே
என் மேல் மனமிரங்கும்

190 எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி துதிப்பேன் -உம்மை

193 கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு

194 பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்

196 இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்

199 நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்

200 இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும கொண்டாடுவோம்

201 விண்ணப்பத்தைக் கேட்பவரே – என் கண்ணீரைக் காண்பவரே

206 உம்மோடு இருப்பதுதான்
உள்ளத்தின் வாஞ்சையையா

212 எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே

217  நன்றி என்று சொல்லுகிறோம் நாதா

219 அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே

220 எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன்

221 அசைவாடும் ஆவியே தூய்மையின் ஆவியே

222 மாறிடா எம் மா நேசரே - ஆ
மாறாதவர் அன்பெந்நாளுமே

223 என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா

224 எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா

229 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

235 இயேசு என் பரிகாரி – இன்ப
இயேசு என் பரிகாரி – என்

244 பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை

246 என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் பார்

251  குயவனே, குயவனே படைப்பின் காரணன UI 8ே

252 சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்

254 உம்மைப் போல் யாருண்டு
எந்தன் இயேசு நாதா

255 நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா

261 பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ

264 சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே

278 ஆராதனை ஆராதனை துதி
ஆராதனை ஆராதனை - (2)

280 யார் என்னை கைவிட்டாலும்
இயேசு கைவிட மாட்டார்

282 தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர்

285 பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்

286 மனதுருகும் தெய்வமே இயேசையா

289 அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்

298 சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே போராட

300 எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்

306 மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும் போல் தேவனே

308 கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே

309 கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்

311 கூடாதது ஒன்றுமில்லையே (4)
தேவனால் கூடாதது

312 ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்

313 இரட்டிப்பான நன்மைகள் தந்திட
இயேசு வாக்களித்தாரே

320 அநாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரைய்யா

322 ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது

323 பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

327 தேவா நான் எதினால் விசேஷித்தவன்

359 நானும் என் வீட்டாருமோவென்றால்

395 காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே

403 இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார்

404 சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்

405 பரம எருசலேமே பரலோகம் வீட்டிறங்குதே

406 தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே

407 என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்

408 காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்

409 நான் சுகமானேன் (2)
புண்ணியரின் காயங்களால் - நான்

410 ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

412 எந்தன் உள்ளம் புது கவியாலே போங்க

415 மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு

416 இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம்! சரணம்! சரணம்!

430 இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்

431 உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

432 பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ

434 இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

436 கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே

442 உங்க கிருபை தான்
என்னைத் தாங்குகின்றது

452 தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்

453 அன்பு கூறுவேன் இன்னும
் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்

455 கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்

456 ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

463 ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்

466  மேகமீதில் இயேசு ராஜன்
  வேகம் வாராரே

467 அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

469 ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே

472 ஆராதிக்க கூடினோம்
ஆர்ப்பரித்து பாடிடுவோம்

476 துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் .

478 சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி

479 தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே
துதிகள் நடுவே கர்த்தர் தங்க

480 கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே

481 அன்பே அன்பே அன்பே
ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தம்

484 எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே [2]

489 எந்தன் கன்மலை ஆனவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே

493

494 அல்பா ஒமேகா ஆதியும் நீரே
நேசர் சத்தம் கேட்டேன்

497 இயேசுவோடு சேர்ந்திருப்பது ஏன்ன பாக்கியம்