Saturday, November 05, 2016

92 தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச

தேவனே நான் உமதண்டையில்
இன்னும் நெருங்கி சேர்வதே
என் ஆவல் பூமியில் – 2

மாவலிய கோரமான
வன்சிலுவை மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலாய் உம் அண்டை சேர்வேன்

1. யாக்கோபைப் போல் போகும் பாதையில்
பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கி உம்மைக் கிட்டிச் சேர்வேன்
வாக்கடங்கா வல்ல நாதா

2. பரத்துக்கேறும் படிகள் போலவே
என் பாதை தோன்ற
பண்ணுமையா எந்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்கு
தருவதெல்லாம் உமதண்டை
அருமையாக என்னைச் சேர்க்கும்
அன்பின் தூதனாகச் செய்யும்

3. நித்திரையினின்று விழித்து காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய்
என் துயர் கல் நாட்டுவேனே
எந்தன் துன்பத்தின் வழியாய்
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்

4. ஆனந்தமாய் செட்டை விரித்து
பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து
பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான்
மருவியும்மை கிட்டிச் சேர்வேன்

89 இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்ட

இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்ட

இழிஞன் எனை மீட்டருள்,

ஏசுவே, கிருபாசனப்பதியே. – இயேசுவே

 

1.

காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவு

கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!

நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து

நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, – இயேசுவே

 

2.

பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,

பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்@

தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட

தேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி, – இயேசுவே

 

3.

சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி

தீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே,

குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச் சதிக்கும்

குற்றங்கள் அறவே தீர்த்து, முற்றுமுடியக் கண் பார்த்து, – இயேசுவே

 

4.

பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை,

புண்ணியனே, உன் சரணம் நண்ணி அண்டினேன்@

எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி?

இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து, – இயேசுவே

87 நீயுனக்கு சொந்தமல்லவே மீட்கப்பட்ட

நீயுனக்கு சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி
நீயுனக்கு சொந்தமல்லவே

நீயுனக்குச் சொந்தமல்லவே 
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்

சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே திரு ரத்தம் ரத்தம்
திரு விலாவில் வடியுது பாரே
வலிய பரிசத்தால் கொண்டாரே
வான மகிமை உனக்கீவாரே

இந்த நன்றியை மறந்து போனாயோ யேசுவை விட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ
சந்ததமுனதிதயங் காயமும் 
சாமி கிறிஸ்தினுடையதல்லவோ

பழைய பாவத்தாசை வருகுதோ பசாசின் மேலே
பட்சம் உனக்குத் திரும்ப வருகுதோ
அழியும் நிமிஷத் தாசை காட்டியே
அக்கினி கடல் தள்ளுவானேன்

பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே உலகைவிட்டு
பிரியினும் அவர்க்கே மரிப்பாயே
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்
உயர்பதவியில் என்றும் நிலைப்பாய்

Friday, November 04, 2016

85. தேன் இனிமையிலும்

Then Inimaiyilum | தேன் இனிமையிலும்

Tags:Unknown Author

பல்லவி
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவீர் திருச்சபையானோரே

காசிநிதனிலே நேசமதாக கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
கசடதை அறுத்து சாபத்தைத் தொலைத்தார் கண்டுணர் நீ மனமே – தேன்

பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம் பின்னும்
நேமியம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி என் மனமே – தேன்

காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கி விடும் – என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே – தேன்

துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் – நீ
அன்பதாய்ச் சேர்ந்தால் அனைத்துனைக் காப்பார் ஆசைகொள் நீ மனமே – தேன்

பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்றும் நாமம் – அதைப்
பிடித்துக் கொண்டால்தான் பேரின்ப வாழ்வைப் பெறுவாய் நீ மனமே – தேன்

79 ஆத்துமமே , என் முழு உள்ளமே - உன

ஆத்துமமே , என் முழு உள்ளமே

பல்லவி

ஆத்துமமே , என் முழு உள்ளமே - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து

சரணங்கள்

1. போற்றிடும் வானோர் , பூதலத்துள்ளோர் 
சாற்றுதற் கரிய தன்மையுள்ள --- ஆத்துமமே

2. தலை முறை தலை முரை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத --- ஆத்துமமே

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான 
வினை பொறுத் தருளும் , மேலான --- ஆத்துமமே

4. வாதை , நோய் , துன்பம் மாற்றி , அனந்த 
ஓதரும் தயைசெய் துயிர் தந்த --- ஆத்துமமே

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும், 
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் --- ஆத்துமமே

6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே , உள்ளமே , என் மனமே --- ஆத்துமமே

Thursday, November 03, 2016

78 ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,

ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!

சரணங்கள்

1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,
அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம்.

2. சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்,
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்.

3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்.

4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்,
ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்.

5. குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்,
கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்

77 ஆர் இவர் ஆராரோ -இந்த -அவனியோர் மாதிடமே

ஆர் இவர் ஆராரோ - இந்த - அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத
பாலகனார் ?

1. பாருருவாகுமுன்னே - இருந்த - பரப் பொருள் தானிவரோ ? 
சீருடன் புவி , வான் , அவை பொருள் யாவையுஞ் சிருட்டித்த 
மாவலரோ ? --- ஆர்

2. மேசியா இவர்தானோ ? - நம்மை - மேய்த்திடும் நரர்கோனோ ? 
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள
மனசானோ ? --- ஆர்

3. தித்திக்குந் தீங்கனியோ ? - நமது தேவனின் கண்மணியோ ?
மெத்தவே உலகிறுள் நீக்கிடும் அதிசயமேவிய விண்
ணொளியோ ? --- ஆர்

4. பட்டத்துத் துரைமகனோ ? - நம்மைப் - பண்புடன் ஆள்பவனோ ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்
தாயகனோ ? --- ஆர்

5. ஜீவனின் அப்பமோதான் ? - தாகம் தீர்த்திடும்பானமோதான் ?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர்
இவர்தானோ ? --- ஆர்

76 பெத்தலையில் பிறந்தவரை


பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே - இன்னும்

1. சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர் - இங்கு
தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார்

2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் - இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்

3. முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே

4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர் - இங்கு
ஆக்களட சத்தத்துக்குள் அழுது பிறந்தார்

5. இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோமே

Wednesday, November 02, 2016

75 கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன் மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

அனுபல்லவி
விண் மண் உண்டாக்கின வித்தகனிட மிருந்
தெண்ணிலா வொத்தசை எந்தனுக்கே வரும்

காலைத் தள்ளாட வொட்டார்,உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாட வொட்டார்
வேலையில் நின் ரிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர்.-

பக்க நிழல் அவரே -எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே 
எக்கால நிலைமையும் எனக் சேதப் படுத்தாது
முக்காலம் நின்ரென்னை நற் காவல் புரியவே .-

எல்லாத் தீமை கட்கும் என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும் ,
பொல்லா உலகினில் போக்கு வரத்தையும் 
நல்லாத்தூமாவையும் நாடோறும்காப்பவர்

72 சருவ லோகாதிபா, நமஸ்காரம்!

1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்.

2. திரு அவதாரா, நமஸ்காரம்!
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!
தரணியின் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோய், நமஸ்காரம்.

3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
பரம சற்குருவே, நமஸ்காரம்!
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்.

4. முத்தொழிலோனே, நமஸ்காரம்!
மூன்றில் ஒன்றோனே நமஸ்காரம்!
கர்த்தாதி கர்த்தா, கருணை சொருபா,
நித்ய திரியேகா, நமஸ்காரம்.

Tuesday, November 01, 2016

57 ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்ம

ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்

அனுபல்லவி
காத்தீரே என்னை கருத்தாக
வழுவாமல் என்னை உமக்காக
எடுத்தீர் என்னையும் உமக்காக
கொடுத்தீர் உமையும் எனக்காக

சரணங்கள்
வல்ல வான ஞான வினோதா
துதியே துதியே துதித்திடுவேன்
எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லை யாவும் தொலைத்தீரே
அல்லல் யாவும் அறுத்தீரே
அலையும் என்னையும் மீட்டீரே – ஸ்தோத்திரம்

நம்பினோரை காக்கும் தேவா
துதியே துதியே துதித்திடுவேன்
அம்புவி யாவையும் படைத்தீரே
அம்பரா உந்தன் வாக்காலே
எம்பரா எல்லாம் ஈந்தீரே
நம்பினோரைக் குந்தன் தயவாலே – ஸ்தோத்திரம்

கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரை கண்பார்த்தீரே
மன்னா எமக்கும் நீர் தானே
எந்நாளும் எங்கள் துணை நீரே – ஸ்தோத்திரம்

தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
தேவா நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக்காத்தீரே
தீ தணுகாதும் மறைவினிலே
தேடியுமதடி தாங்கிடுவேன் – ஸ்தோத்திரம்

அல்லேலூயா ஸ்தோத்திரமே
துதியே துதியே துதித்திடுவேன்
அகில சிருஷ்டிகளும் துதிக்க
அடிமை துதியாதிருப்பேனோ
அல்லும் பகலும் நித்தியமாய்
அன்பே உமையே துதித்திடுவேன் – ஸ்தோத்திரம்

56 ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா

ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்

ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்
ஸ்தோத்திரம் இயேசுநாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் உம அடியார்திரு
நாமத்தி னாதரவில்

இன்றைத் தினமதிலும் ஒருமித்து
கூட உம நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

நின் உதிரமதினால் திறந்த
நின் ஜீவ புது வழியாம்
நின் அடியார்க்கு பிதாவின் சன்னதி
சேரவுமே சந்ததம்

இத்தனை மகத்வமுள்ள பதவி
ஈனர்கள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்

வான தூதர் சேனைகள் மனோகர
கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கபெரும்
மன்னவனே உமக்கு .

நீரல்லால் எங்களுக்குப் பரலோகில்
யாருண்டு ஜீவ நாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேற்றமில்லை பரனே .

55 ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா

1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா 
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும் 
ஜெபத்திலே தரித்திருந்து 
ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் 
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் 
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

2. ஊக்கத்துடனே ஓர் முகமாய் 
வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்வீர்

3. ஆகாத நோக்கம் சிந்தனையை 
அகற்றும் எங்கள் நெஞ்சைவிட்டு
வாகானதாக்கும் மனமெல்லாம் 
வல்லமையோடே வேண்டிக்கொள்வோம்

4. இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூறெல்லாம் நீக்கிவிடும்
சளைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம் 

Monday, October 31, 2016

54 மேகங்கள் நடுவே வழிபிறக்கும்

மேகங்கள் நடுவே வழிபிறக்கும்

1.மேகங்கள் நடுவே வழி பிறக்கும் 
பூதங்கள் கடந்து கடந்து வரும் 
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும் 
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

பல்லவி

வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நான் இருப்பேன் 
பரமன் இயேசுவின் புன்னகை முகம் - என் 
கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்

2.நாற்றிசையினின்றும் கூடிடுவார் 
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர் 
தோத்திரக் கீதமே தொனித்து நிற்கும் 
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் 

3.கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும் 
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும் 
கர்த்தரின் வருகை நாளின்போது 
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் 

4.திருடன் வருகை போலிருக்கும் 
தீவிரம் அவர் நாள் வெகு சமீபம் 
காலையோ மாலையோ நள்ளிரவோ 
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் 

53 மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம் இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்

1.

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம்
இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்

எந்தன் உள்ளத்தில் சொந்தமானார்
ஆ…ஆ…ஆனந்தமே

பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே – இந்த

 

2.

சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
துரம் போயினும் கண்டு கொண்டார்
தமது ஜவனை எனக்கும் அளித்து
ஜவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்– இந்த

 

3.

எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும்வரை காத்துக் கொள்வேன்– இந்த

 

4.

அவர் வரும் நாளில் என்னைக் கரம் அசைத்து அன்பாய் கூப்பிட்டுச் சேர்த்துக் கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்– இந்த

52 பூரண ஆசீர் பொழிந்திடுமே பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே

Poorana Aaseer Pozhinthidumae | பூரண ஆசீர் பொழிந்திடுமே

Tags:Sister Saral Navaroji

பூரண ஆசீர் பொழிந்திடுமே
பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே
ஜீவ தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலே
தேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே

வானம் திறந்துமே வல்ல ஆவியே
வந்திறங்கி வரமே தந்தருளுமே
அன்பின் அருள் மாறியே வாருமே
அன்பரின் நேசம் பொங்கிப் பாடவே

ஆத்துமா தாகம் தீர்க்கவாருமே
ஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவே
வல்ல அபிஷேகம் அக்கினி பிரகாசம்
சொல்லரும் சந்தோஷம் உள்ளம் ஊற்றுமே – வானம்

தேவன் பின் வெள்ளம் புரண்டோடுதே
தாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமே
சக்தி அடைந்தேக பக்தியோடிலங்க
சுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கிவா – வானம்

மா பரிசுத்த ஸ்தலமதிலே
மாசில்லாத தூய சந்நிதியிலே
வான் மகிமை தங்க வாஞ்சையும் பெருக
வல்லமை விளங்க துதி சாற்றுவோம் – வானம்

குற்றங் குறைகள் மீறுதல்களும்
முற்றுமாக நீங்க சுட்டெரித்திடும்
இயேசுவின் சிலுவை இரத்தமே என் தேவை
எந்தன் ஆத்துமாவை வெண்மையாக்குமே – வானம்

மேகத்திலே நான் வந்திறங்குவேன்
வேகமே ஓர் நாளே வெளிப்படுவேன்
என்றுரைத்த தேவா ஏக திவ்ய மூவா
இயேசுவே இறைவா வேகம் வாருமே – வானம்