Thursday, July 13, 2017

222.மாறிடா எம் மா நேசரே


1. மாறிடா எம் மா நேசரே - ஆ
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே - ஆ

பல்லவி

ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதன் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே

2. பாவியாக இருக்கையிலே - அன்பால்
பாரில் உன்னைத் தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே. --- ஆ! இயேசு

3. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே --- ஆ! இயேசு

4. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட - தூய
தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க --- ஆ! இயேசு

5. நியாய விதி தினமதிலே - நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே --- ஆ! இயேசு

6. பயமதை நீக்கிடுமே - யாவும்
பாரினிலே சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே --- ஆ! இயேசு

221. அசைவாடும் ஆவியே தூய்மையின் ஆவியே

1.அசைவாடும் ஆவியே தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப இறங்கி வாருமே

2.பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே

3.தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால்

4.துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால்
நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே

5.அலங்கரியும் வரங்களினால் எழும்பி ஜொலித்திடவே
தந்திடுமே கனிகளையும் நிறைவாக இப்போதே

Wednesday, July 12, 2017

220. எலியாவின் தேவன் நம் தேவன்

எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன் -2
தாசர்களின் ஜெபம் கேட்பார் 
வல்ல பெரும் காரியம் செய்திடுவார் -2

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே ஆர்ப்பரிப்போம் -2

வேண்டிடும் பக்தரின் ஜெபம் கேட்டே
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன் -2
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில் 
பாத்திரங்களை அவர் ஆசீர்வதிப்பார் -2

சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்
வீரமுடன் முழங்கினான் தேவ மனிதன் -2
அக்கினியால் பதிலளிக்கும் 
தேவனே தேவன் என்றார் தேவ மனிதன் -2

தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார் -2
கேட்டருளும் கேட்டருளும்
என்றே கதறினார் தேவ மனிதன் -2

வானங்களை திறந்தே வல்ல தேவன்
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன் -2
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்

219. அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே

அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குறார்

சரணங்கள்

1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாயலோகத்தோடழியாதூயான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே --- அந்தோ

2. அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே --- அந்தோ

3. முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரை மீட்டிடவே --- அந்தோ

4. அதிசயம் இது இயேசுவின் தியாகம்
அதிலும் இன்பம் அன்பரின் தியாகம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே --- அந்தோ

5. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் --- அந்தோ

Tuesday, July 11, 2017

217. நன்றி என்று சொல்லுகிறோம் நாதா

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா

நன்றி இயேசு ராஜா
நன்றி இயேசு ராஜா

1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா --- நன்றி

2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா --- நன்றி

3. வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா --- நன்றி

4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா --- நன்றி

5. தனிமையிலே துணை நின்றீர் நன்றி ராஜா
தாயைப் போல தேற்றினீர் நன்றி ராஜா --- நன்றி

6. சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே --- நன்றி

7. புது வாழ்வு தந்தீரே நன்றி ராஜா
புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா --- நன்றி

8. ஊழியம் தந்தீரே நன்றி ராஜா
உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா --- நன்றி

212. எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே இந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே

எப்படி நான் ஜெபிக்க வேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும் கற்றுத்தாரும் ஆவியானவரே(2) வேதவசனம் புரிந்துகொண்டு விளக்கங்களை அறிந்திட வெளிச்சம் தாரும் ஆவியானவரே (2) ...ஆவியானவரே

கவலை கண்ணீர் மறக்கணும்.. கர்த்தரையே நோக்கணும் கற்றுத் தாரும் ஆவியானவரே செய்த நன்மை நினைக்கணும் நன்றியோடு துதிக்கணும் சொல்லித் தாரும் ஆவியானவரே ...ஆவியானவரே

எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும் வழிநடத்தும் ஆவியானவரே
உம்விருப்பம் இல்லாத இடங்களுக்கு செல்லாமல் தடுத்து றிறுத்தும் ஆவியானவரே ...ஆவியானவரே

எதிரிகளின் சூழ்ச்சிகள் சாத்தானின் சூழ்ச்சிகள் எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே உடல் சோர்வுகள் அசதிகள் பெலவீனங்கள் நீங்கி உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே ...ஆவியானவரே

Monday, July 10, 2017

204. நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார்

நம் இயேசு நல்லவர்
ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்

ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்தரிப்போம்

1. அதிசயமானவர்
ஆறுதல் தருகிறார்
சர்வ வல்லவர்
சமாதானம் தருகிறார் - உனக்கு

2. கண்ணீரைக் காண்கிறார்ங
கதறலைக் கேட்கிறார்
வேதனை அறிகிறார்
விடுதலை தருகிறார் - இன்று

3. எதிர்காலம் நமக்குண்டு
எதற்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே
ஆளுவோம் தேசத்தை - நாம்
4. நொறுங்குண்ட நெஞ்சமே

நோக்கிடு இயேசுவை
கூப்பிடு உண்மையாய் - இன்று
குறையெல்லாம் நீக்குவார் - உன்

5. நண்பனே கலங்காதே
நம்பிக்கை இழக்காதே
கண்ணீரைத் துடைப்பவர்
கதவண்டை நிற்கிறார்

6. எத்தனை இழப்புகள்
ஏமாற்றம் தோல்விகள்
கர்த்தரோ மாற்றுவார்
கரம் நீட்டித் தேற்றுவார்

206. உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சையையா

உம்மோடு இருப்பதுதான்
உள்ளத்தின் வாஞ்சையையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா
இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன்

எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள் -2
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் -2

இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே
என் ஜீவனை அழிவில் நின்று
மீட்டவரே என் மேய்ப்பரே

எபிநேசரே எல்எலியோன்
என்றுமே உயர்ந்தவரே
எல்ஷடாய் (சர்வ) வல்லவரே
எல்ரோயீ காண்பவரே

மன்னிப்பதில் வள்ளல் நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
உம் அன்பையும் இரக்கத்தையும்
மணி முடியாய் சூட்டுகின்றீர்

Sunday, July 09, 2017

201. விண்ணப்பத்தைக் கேட்பவரே – என்

விண்ணப்பத்தைக் கேட்பவரே – என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே

3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்

4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா

5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்

6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரம்

200. இயேசு ராஜா வந்திருக்கிறார்

இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும கொண்டாடுவோம்
கைதட்டி நாம் பாடுவோம்

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம்

1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
உண்மையாக தேடுவோரின்
உள்ளத்தில் வந்திடுவார்

2. மனதுருக்கம் உடையவரே
மன்னிப்பதில் வள்ளலவர்
உன் நினைவாய் இருக்கிறார்
ஓடிவா என் மகனே (ளே)

3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார்
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவார்

4. நோய்களெல்லாம் நீக்கிடுவார்
நொடிப்பொழுதே சுகம் தருவார்
பேய்களெல்லாம் நடுநடுங்கும்
பெரியவர் திரு முன்னே – நம்ம

5. பாவமெல்லாம் போக்கிடுவார்
பயங்களெல்லாம் நீக்கிடுவார்
ஆவியினால் நிரப்பிடுவார்
அதிசயம் செய்திடுவார்

6. கசையடிகள் உனக்காக
காயமெல்லாம் உனக்காக
திருஇரத்தம் உனக்காக
திருந்திடு என் மகனே!