Tuesday, November 15, 2016

143 விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்

விடுத‌லை நாய‌க‌ன் வெற்றியைத் த‌ருகிறார்
என‌க்குள்ளே இருக்கிறார்
என்னே ஆன‌ந்த‌ம்

1.
நான் பாடிப் பாடி ம‌கிழ்வேன் தினம்
ஆடி ஆடி துதிப்பேன் எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார் – விடுத‌லை

2.
அவ‌ர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவ‌ம் அனைத்தும் ம‌ன்னித்தார்
புது ம‌னித‌னாக‌ மாற்றினார்   – விடுத‌லை

3.
அவ‌ர் அன்பின் அபிஷேக‌த்தால்
என்னை நிர‌ப்பி ந‌ட‌த்துகின்றார்
சாத்தானின் வ‌லிமை வெல்ல‌
அதிகார‌ம் என‌க்குத் த‌ந்தார்    – விடுத‌லை

4.
செங்க‌ட‌லைக் க‌ட‌ந்து செல்வேன்
யோர்தானை மிதித்து ந‌ட‌ப்பேன்
எரிகோவை சுற்றி வ‌ருவேன்
எக்காள‌ம் ஊதி ஜெயிப்பேன்   – விடுத‌லை

142 ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கொடி கொடி ஸ்தோத்திரம

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கொடி கொடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியால் உயர்த்துவேன்

நீதியின் கரத்தினால்
தாங்கி நடத்துவார்
கர்த்தரே என் பெலன்
எதற்குமே அஞ்சிடேன் – ஜெயம்

அற்புதம் செய்பவர்
அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர்
மீட்பர் ஜெயிக்கிறார் – ஜெயம்

நம்பிக்கை தேவனே
நன்மைகள் அளிப்பார்
வார்த்தையை அனுப்பியே
மகிமைப் படுத்துவார் – ஜெயம்

உண்மை தேவனே
உருக்கம் நிறைந்தவர்
என்னை காப்பார்
உறங்குவதில்லையே – ஜெயம்

139. அப்பா பிதாவே அன்பான தேவா

அப்பா பிதாவே அன்பான தேவா

அருமை இரட்சகரே ஆவியானவரே

 

1.

எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்

நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர்

நன்றி உமக்கு நன்றி (அப்பா)

 

2.

தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்

கலங்காதே என்று கண்ணீடரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர் –   நன்றி

 

3.
உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே

கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே –   நன்றி

 

4.

இரவும் பகலும் ஐயா கூட இருந்து
எந்நாளும் காப்பவரே

மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே   –   நன்றி

 

5.

ஒன்றை நான் கேட்டேன் அதையே
நான் தேடி ஆர்வமாய் நாடுகிறேன்

உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்பணி செய்திடுவேன் –   நன்றி