Saturday, July 22, 2017

261. பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ

பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெருவெள்ள இரைச்சல் போலே

இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாம்
பதினாயிரங்களில் சிறந்தோர்

1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதிமதிரம் --- இயேசுவே

2. அவர் இடது கை என் தலை கீழ்
வலக்கரத்தாலே தாங்குகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கொடி நேசமே --- இயேசுவே

3. என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் --- இயேசுவே

4. என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினின் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நான் செல்வேன் அந்நேரமே --- இயேசுவே

5. நாம் மகிழ்ந்து துதித்திடுவோம்
ஆட்டுக்குட்டியின் மண நாளிலே
சுத்த பிரகாச ஆடையோடே
பறந்திடுவோம் நாம் மேகத்தில் 

Thursday, July 20, 2017

255. நன்றியால் பாடிடுவோம் நல்லவர் இயேசு நல்கிய

நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே

1.செங்கடல் தனை நடுவாய்ப் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும்
தயவாய் மாதயவாய்

2.உயிர்ப்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்திரராய் இருக்க
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க

3.ஜீவனைத் தியாகமாய் வைத்தப் பலர் கடும்
சேவையில் மரித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம்

4.மித்ருக்களான பலர் நன்றியிழந்தே
சத்துருக்களாயினாரே
சத்தியத்தைச் சார்ந்து தேவ
சித்தம் செய்திடுவோம்

5.அழைக்கப்பட்டோரே நீர் உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லா திரு ஆக்கமிதனை
அவனியோர்க் களிப்பீர்

6.சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே
சீயோனின் ராஜனையே

254. உம்மைப் போல் யாருண்டு

உம்மைப் போல் யாருண்டு
எந்தன் இயேசு நாதா 
இந்தப் பார்தலத்தில்
உம்மைப் போல் யாருண்டு
பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
தேவா தம் அன்பினால் மன்னித்தீர் --- உம்மைப் 

1. உலகம் மாமிசம் பிசாசுக் கடியில் 
அடிமை யாகவே பாவி நான் ஜீவித்தேன் 
நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
மனம் போல் நடந்தேன் ஏமாற்றம் அடைந்தேன்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
உம்மை மறந்த ஓர் துரோகி நான்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
அடிமை உமக்கே இனி நான் --- உம்மைப்

2. இன்றைக்கு நான் செய்யும் இந்தத் தீர்மானத்தை
என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்
நொறுக்கும் , உறுக்கும் , உடையும் வனையும்
உமக்கே உகந்த தூய சரீரமாய்
ஐம் பொறிகளையும் உமக்குள் அடக்கும்
இயேசுவே ஆவியால் நிரப்பும்
வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய் திகழ
அக்கினி என் உள்ளம் இறக்கும் --- உம்மைப்

3. வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும்
சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்
மேசியா வருகை வரையில் பலரை
சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்
முழங்காலில் நிற்க வேதத்தை அறிய
தினந்தோறும் தேவா உணர்த்தும்
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும் 
என்றுமே வராமல் காத்திடும் --- உம்மைப்

252. சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்

சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்

1. ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் – அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்

2. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
துதியின் உடையுடனே அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம்

3. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் – அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார்

4. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடி
புன்னகை பூத்திடுவோம் புது
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம்

5. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கிறதே – அவர்
வரும்வேளை யறியாதிருப்பதால் எப்போதும்
ஆயத்தமாயிருப்போம்

Wednesday, July 19, 2017

251. குயவனே, குயவனே படைப்பின் காரணனே

1. குயவனே, குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே, கண்ணோக்கி பார்த்திடுமே

வெறுமையான பாத்திரம் நான், வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய், விளங்கச் செய்யுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம், இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்வித பாத்திரமாய், வனைந்து கொள்ளுமே

2. இறைவனே இறைவனே, இணையில்லாதவனே
குறை நிறைந்த என்னையுமே, கண்ணோக்கி பார்த்திடுமே

விலைபோகாத பாத்திரம் நான், விரும்புவார் இல்லையே
விலையில்லா உம் கிருபையால், உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னைத், தம்மைப்போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே, உடைமையாக்கிடுமே

3. மேய்ப்பனே மேய்ப்பனே, மந்தையை காப்பவனே
மார்க்கம் அகன்ற என்னையுமே, கண்ணோக்கி பார்த்திடுமே

மண்ணாசையில் நான் மயங்கியே, மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின்பற்றியே, கண்டேன் இல்லை இன்பமே
காணாமல் போன பாத்திரம் என்னைத், தேடி வந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம் பாதம் செல்லும், பாதையில் நடத்திடுமே

246. என்னை நேசிக்கின்றாயா? என்னை நேசிக்கின்றாயா?

என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா?

சரணங்கள்

1. பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் முடிவினைப் பார்
பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய் --- என்னை

2. பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் பார்
உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன்
பாதம் தன்னில் இளைப்பாற வா --- என்னை

3. வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்
தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவே
ஓடி வந்தேன் மானிடனாய் --- என்னை 

Tuesday, July 18, 2017

244. பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை

பாவத்தின் பாரத்தினால்
தவித்திடும் பாவி என்னை
நின் கிருபை பிரவாகத்தால்
தேற்றிடும் ஏசு நாதா (2)

கெட்ட குமாரனைப் போல்
துஷ்டனாய் அலைந்தேன் அப்பா
நின் அன்பை உணராமல்
துரோகம் நான் செய்தேனே

கள்ளனாயினும் நான்
நீர் பெற்ற பிள்ளை அல்லோ
கள்ளனுக்கருள் செய்த நீ
தள்ளாதே சிலுவை நாதா

தந்தையை விட்ட பின்பு
தவிடு தான் ஆகாரமோ
மனம் கசிந்து நொந்தேன்
கண்ணீரை துடைத்திடுமே

தந்தை தாய் தாமரெல்லாம்
என்னைக் கைவிடுவார்கள்
சாகும் நாளில் தாங்குவார்
நீர் அல்லால் யாருமில்லை

235. இயேசு என் பரிகாரி – இன்ப இயேசு என் பரிகாரி – என்

இயேசு என் பரிகாரி – இன்ப
இயேசு என் பரிகாரி – என்
ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப
இராஜா என் பரிகாரி

என்ன துன்பங்கள் வந்தாலும்
என்ன வாதைகள் நேர்ந்தாலும்
என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும் – இன்ப
இராஜா என் பரிகாரி

சாத்தான் என்னை எதிர்த்தாலும்
சத்துரு என்னை தொடர்ந்தாலும்
சஞ்சலங்கள் வந்தபோது – இன்ப
இராஜா என் பரிகாரி

பணக் கஷ்டங்கள் வந்தாலும்
மனக்கஷ்டகள் நேர்ந்தாலும்
ஜனம் என்னை வெறுத்தாலும் – இன்ப
இராஜா என் பரிகாரி

பெரும் வியாதிகள் வந்தாலும்
கடும் தோல்விகள் நேர்ந்தாலும்
பல சோதனை சூழ்ந்தாலும் – இன்ப
இராஜா என் பரிகாரி

எனக்கென்ன குறை உலகில்
என் இராஜா துனை எனக்கு
என் ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப
இராஜா என் பரிகாரி

Monday, July 17, 2017

229.ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும்
எங்கள் மத்தியிலே

1.உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே

2.பத்மு தீவினிலே பக்தனை தேற்றிநீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே

3.சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்மா தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே

4.ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே

224.எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே

1. பூமியில் வாழ்கின்ற யாவும்
அதின் மேல் உள்ள ஆகாயமும்
வான்தூதர் சேனைகள் யாவும்
தேவா உம்மைப் போற்றுதே

2. சூரிய சந்திரரோடே
சகல நட்சத்திர கூட்டமும்
ஆகாயப் பறவைகள் யாவும்
தேவா உம்மைப் போற்றுதே

3. காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனித் தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மைப் போற்றுதே

4. பாவ மனுக்குலம் யாவும்
தேவா உம் அன்பினை உணர்ந்தே
சிலுவையின் தியாகத்தைக் கண்டு
ஒயா துதி பாடுதே

Sunday, July 16, 2017

223. என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா

என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும் (2)
அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிருபை முன் செல்ல அருளும் (2)

1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2)
கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ
கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) – என் இயேசு

2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2)
பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது
பரமனே என் முன் தீபமாய் வாரும் (2) – என் இயேசு

3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (2)
இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்
என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) – என் இயேசு