Saturday, July 01, 2017

151. மகிமையின் நம்பிக்கையே

மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா
உம்மையல்லோ பற்றிக்கொண்டேன்
உலகத்தில் வெற்றி கொண்டேன்

துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
தூயவர் உம்மை நான் பாடுவேன்

1. ஆத்துமாவின் நங்கூரமே
அழிவில்லா பெட்டகமே
நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
நிம்மதியின் கன்மலையே

2. பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பயமில்லை பாதிப்பில்லை
உம் குரலோ கேட்குதையா
உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா

3. நல் மேய்ப்பரே நம்பிக்கையே
நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
உம் தோளில் தான் நானிருப்பேன்

4. பிரகாசிக்கும் பேரொளியே
விடிவெள்ளி நட்சத்திரமே
உம் வசனம் ஏந்திக் கொண்டு
உலகெங்கும் சுடர்விடுவேன்

150. தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே ஆராதிக்கின்றேன்

தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்
 
1.   அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்
 
2.   கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்
 
3.   முழமனதோடு ஆராதிக்கின்றேன்
முழங்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்
 
4.   யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக் கொள்வீர்
 
5.   யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்
 
6.   யேகோவா ஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே

Friday, June 30, 2017

149. தாவீதைப் போல நடனமாடி

தாவீதைப் போல நடனமாடி அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்

என்ன வந்தாலும் எது நடந்தாலும் அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் இயேசப்பா ஸ்தோத்திரம் இயேசப்பா ஸ்தோத்திரம்

கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும் அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் ...இயேசப்பா

பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் ...இயேசப்பா

ஆவியினாலே அபிஷேகம் செய்த அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் ...இயேசப்பா

கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் ...இயேசப்பா

148. நல்ல சமாரியன் இயேசு

நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தாரே

1.   என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே

2.   அருகில் வந்தாரே
மனது உருகினாரே

3.   இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே

4.   எண்ணெய் வார்த்தாரே
அபிஷேகம் செய்தாரே

5.   காயம் கட்டினாரே
தோள்மேல் சுமந்தாரே

6.   சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே

7.   மீண்டும் வருவாரே
அழைத்துச் செல்வாரே

147. ஒரு தாய் தேற்றுவது போல்

ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பரே
...ஒரு தாய்

கரம் பிடித்து நடத்துவார் கன்மலைமேல் நிறுத்த்வார் ...ஒரு தாய்

எனக்காக மரித்தாரே என்பாவம் சுமந்தாரே
...ஒரு தாய்

ஒருபோதும் கைவிடார் ஒருநாளும் விலகிடார்
...ஒரு தாய்

Thursday, June 29, 2017

146. என்றும் ஆனந்தம் என் இயேசு

என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார் துதிப்பேன் துதிப்பேன் துதித்துக் கொண்டேயிருப்பேன்

அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா ஆனந்தமே

உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில் என்றும் தங்குவேன் தேவனை நோக்கி அடைக்கலப் பாறை என்றே சொல்லுவேன் ...என்றும் ஆனந்தம்

தமது சிறகால் என்னை மூடி காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம் எனது கேடகம் ...என்றும் ஆனந்தம்

வழிகளிலெல்லாம் என்னைக் காக்க தூதர்கள் எனக்குண்டு பாதம் கல்லில் மோதாமல் காத்து கரங்களில் ஏந்துவார் ...என்றும் ஆனந்தம்

சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடந்தே செல்லுவேன் சாத்தானின் சகல வலிமையை வெல்ல அதிகாரம் எனக்குண்டு ...என்றும் ஆனந்தம் இரவின்

பயங்கரம் பகலின் அம்பு எதற்கும் பயமில்லை உன்னத தேவன் எனது அடைக்கலம் தங்கும் உறைவிடம் ...என்றும் ஆனந்தம்

தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு என்றும் விடுதலை அவரது நாமம் அறிந்த எனக்கு அவரே அடைக்கலம் ...என்றும் ஆனந்தம்

ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு என்றும் பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை கொடுத்து என்னை உயர்த்துவார் ...என்றும் ஆனந்தம்

145. தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்


தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2

1. உலகப் பெருமை இன்பமெல்லாம்
உமக்காய் இழந்தேனையா
உம்மைப் பிரிக்கும் பாவங்களை
இனிமேல் வெறுத்தேனையா
உம் சித்தம் நிறைவேற்றுவேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன்

2. எதை நான் பேசவேண்டுமென்று
கற்றுத் தாருமையா
எவ்வழி நடக்க வேண்டுமென்று
பாதை காட்டுமையா
ஒளியான தீபமே
வழிகாட்டும் தெய்வமே

3. உலகம் வெறுத்து பேசட்டுமே
உம்மில் மகிழ்ந்திருப்பேன்
காரணமின்றி பகைக்கட்டுமே
கர்த்தரைத் துதித்திடுவேன்
சிலுவை சுமந்தவரை
சிந்தையில் நிறுத்துகிறேன

Wednesday, June 28, 2017

144. அப்பா நான் உம்மைப்

அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

1. நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ        

2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ

3. நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி         

4. ஜீவ நீருற்று நீர் தானே
உந்தன்மேல் தாகம் கொண்டேன் 

Tuesday, June 27, 2017

137. இரத்தக் கோட்டைக்குள்ளே

இரத்தக் கோட்டைக்குள்ளே
நான் நுழைந்து விட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்தத் தீங்கும் தீண்டாது

1. நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்

2. இம்மட்டும் உதவின எபினேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என் தேவன் பெரியவரே

3. தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்

4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர் – என்னை

5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்