Thursday, June 15, 2017

118. இயேசு என்ற திரு நாமத்திற்கு  எப்போதுமே மிக ஸ்தோத்திரம

இயேசு என்ற திரு நாமத்திற்கு 
எப்போதுமே மிக ஸ்தோத்திரம் 

1. வானிலும் பூவிலும் மேலான நாமம் 
வல்லமையுள்ள நாமமது 
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது 

2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த 
வீரமுள்ள திருநாமமது 
நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே 

3. பாவத்திலே மாளும் பாவியை மீட்க 
பாரினில் வந்த மெய் நாமமது 
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது 

4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும் 
உன்னத தேவனின் நாமமது 
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது 

5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில் 
தாங்கி நடத்திடும் நாமமது 
தடை முற்றுமகற்றிடும் நாமமது 

116. நன்றியால் துதிபாடு நம் இயேசுவை

நன்றியால் துதிபாடு நம் இயேசுவை
உள்ளத்தால் என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் (2)

1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார் (2)
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும் (2) நன்றியால்

2. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழல் உண்டு (2)
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்து விடும் (2) நன்றியால்

3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம் (2)
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம் (2) நன்றியால்

3.  சரீரம், ஆத்துமா, ஆவியினாலும்
    சோர்ந்து போகும் வேளையில் எல்லாம்
    துதி சத்ததால் உள்ளம் நிறைந்தால்
    தூயரின் பெலன் கிடைக்கும்           - நன்றியால்

115. ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்

2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்

3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்

4. தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்

5. காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன்

6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்

Wednesday, June 14, 2017

113.கால் மிதிக்கும் தேசமெல்லாம் என் கர்த்தருக்கு சொந்தமாகும்

கால் மிதிக்கும் தேசமெல்லாம் என் கர்த்தருக்கு சொந்தமாகும் கண் பார்க்கும் பூமியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும் .

1. பறக்கட்டும் பறக்கட்டும் சிலுவையின் ஜெயக்கொடி அல்லேலூயா உயரட்டும் உயரட்டும் இயேசுவின் திருநாமம் அல்லேலூயா .

2. எழும்பட்டும் எழும்பட்டும் கிதியோனின் சேனைகள் முழங்கட்டும் முழங்கட்டும் இயேசுதான் வழியென்று .

3. செல்லட்டும் செல்லட்டும் ஜெபசேனை துதிசேனை வெல்லட்டும் வெல்லட்டும் எதிரியின் எரிகோவை .

4. திறக்கட்டும் திறக்கட்டும் சுவிசேஷ வாசல்கள் வளரட்டும் வளரட்டும் அபிஷேக திருச்சபைகள்