Saturday, October 22, 2016

41 எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப்போல் ஒருதேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வமே நீர்

ஆ! ஆனந்தம், ஆனந்தமே!
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே!

1. பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே

2. பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே

3. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வமே நீர்

4. எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே

5. பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ
பணம் ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அரும் இயேசுவே
போதும் எனக்கு நீரே

40 என் நேசர் ஏசுவின் மேல் சாய்ந்தே துன்ப வனாந்திரத்தில் நடந்திட

En Naesar Yaesuvin | என் நேசர் ஏசுவின்
Tags:Sister Saral Navaroji

என் நேசர் ஏசுவின் மேல் சாய்ந்தே
துன்ப வனாந்திரத்தில் நடந்திட
இன்ப நல் வாழ்வடைந்தேன்

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா
பாலிலும் வெண்மை தூயப்பிதா
பூரண ரூப சௌந்தரியமே
பேர் சிறந்த இறைவா – என் நேசர்

கன்னியர்கள் நேசிக்கும் தேவா
கர்த்தரின் நாமம் பரிமளமே
ஏசுவின் பின்னே ஓடி வந்தோம்
என்னையும் இழுத்துக் கொண்டார் – என் நேசர்

நேசக் கொடிமேல் பறந்தோங்க
நேசர் பிரசன்னம் வந்திறங்க
கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன்
கர்த்தரின் ஆறுதலே – என் நேசர்

தென்றலே வா வாடையே எழும்பு
தூதாயீம் நற்கனி தூயருக்கே
வெலி அடைத்த தோட்டமிதே
வந்திங்கு லாவுகிறார் – என் நேசர்

நாட்டினிலே பூங்கனி காலம்
காட்டுப் புறாவின் பாட்டொலிக்கும்
கன்மலை சிகரம் என் மறைவே
இந்நேரமே அழைத்தார் – என் நேசர்

நித்திரையே செய்திடும் இராவில்
நித்தம் என் ஆத்துமா நல் விழிப்பே
என் கதவருகே நின்றழைத்த
ஏசுவை நேசிக்கின்றேன் – என் நேசர்

நேசத்தழல் ஏசுவின் அன்பே
நேசம் மரணம் போல் வலிதே
வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால்
உள்ளம் அணைந்திடாதே – என் நேசர்

தூப ஸ்தம்பம் போலவே எழும்பி
தேவ குமாரன் வந்திடுவார்
அம்மினதாபின் இரதம் போல
அன்று பறந்து செல்வேன் – என் நேசர்

Thursday, October 20, 2016

39 எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் இயேசு தருகிறார் (2)

எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார் (2)
ஆனந்தம் கொள்ளுவேன் அவரைநான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா (2)

பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னை தேற்றினார் – ஆனந்தம்

வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதைக்காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம்

சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – ஆனந்தம்

தந்தை தாயும் நண்பர் உற்றார் யாவுமாயினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் – ஆனந்தம்

இவ்வுலக பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் – ஆனந்தம்

38 எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்

அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காலம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள

வானமும் பூமியும் மாறிடினும்
வல்லவர் வாக்குதாம் மாறிடாதே
தேவதூதர் பாடல் தொனிக்க
தேவன் அவரையே தரிசிப்போமே – எக்காள

கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள

கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
லன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – எக்காள

கள்ளர்கள் பரவி அங்கு மிங்கும்
கர்த்தரின் வார்த்தையைப் புரட்டுகிறார்
கர்த்தரே வாரும் வாஞ்சையை தீரும்
கருத்துடன் நாம் விழித்திருப்போம் – எக்காள

37 என்ன என் ஆனந்தம், என்ன என் ஆனந்தம

என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !
இயம்பலாகாதே ,
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே.

சரணங்கள்

1. கூடுவோம் , ஆடுவோம் , பாடுவோம் , நன்றாய் 
மகிழ் கொண்டாடுவோம் ; 
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்.

2. பாவங்கள் , சாபங்கள் , கோபங்கள் எல்லாம் 
பரிகரித்தாரே ;
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே.

3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு ,
அருளினதாலே ,
நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
பகர வேண்டியதே.

4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே ,
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனைத் தோத்தரிப்போம்.

36 எனக்காய் ஜீவன் விட்டவர

எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே என்னை சந்திக்க வந்திடுவாரே

இயேசு போதுமே
இயேசு போதுமே
எந்த நாளிலுமே என் நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே
இயேசு போதுமே

1. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன்செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன்னேறவே

2. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார்

3. மனிதர் என்னை கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும்

35 உன்னதமானவரின் - உயர் மறைவிலிருக்கிறவன

1. உன்னதமானவரின் - உயர் மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்

2. தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே - அவர்

3. இரவின் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் - அவர்

4. ஆயிரம் பதினாயிரம்
பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே - அவர்

5. தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் - அவர்

6. உன் வழிகளிளெல்லாம்
உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தம் கரங்களில் ஏந்திடுவார் - அவர்

7. சிங்கத்தின் மேலும் நடந்து
வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்து காத்திடுவார் - அவர்

8. ஆபத்திலும் அவரை நான்
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர் - அவர்

34 உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதிய

உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப் பாடுவேன் – இயேசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே!

1.
பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன் பாடிடப் பாடல்கள் ஈந்தளித்தீர்! – உம்

2.
புது எண்ணெயால் புது பெலத்தால் புதிய கிருபை புதுக்கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர்!- உம்

3.
நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர்- உம்

4.
என்முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே!- உம்

5.
கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கிளை நறுக்கி களைபிடுங்கி கர்த்தரே காத்தென்னைச் சுத்தம் செய்வீர்!- உம்

6.
என் இதய தெய்வமே நீர் எனது இறைவா! ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன்!- உம்

7.
சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன- உம்

33 இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே 
அதி வேகமாய் செயல்படுவோம்

2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம் 
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே 
அதி வேகமாய் செயல்படுவோம்

3. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையே 
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே 
அதி வேகமாய் செயல்படுவோம்

4. ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே 
இனி நான் அல்ல , அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே 
அதி வேகமாய் செயல்படுவோம்

Wednesday, October 19, 2016

32 இயேசுவே உம் நாமத்தினால்

இயேசுவே உம் நாமத்தினால்
இன்பம் உண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந்நன்னாளிலே

எங்கள் தேவனே எங்கள் ராஜனே(2)
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம்

மன்னை நாடி பொன்னை அடைந்தோம்
புகழ்தேடி ஏமாற்றம் கொண்டோம்
வின்னை நோக்கி ஜெயம் பெற்றோம்
இயேசுவின் க‌ரிசனத்தால் ‍- எங்கள் தேவனே

இயேசுவை நாம் பின் செல்லுவோம்
உலகை என்றும் வெறுப்போம்
துன்ப பாதை சென்றிடுவோம்
என்றும் அவரின் பலத்தால் - எங்கள் தேவனே

உன்னைக் கண்டு அழைக்கும்
சத்தத்தை கேட்டாயோ பாவியே
இன்று இயேசுவன்டை வாராயோ
நித்ய ஜீவன் பெற்றிடவே ‍ - எங்கள் தேவனே

31 இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவன

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே !

சரணங்கள்

1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் - தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே ! --- இதோ

2. தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் - தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவ நதியும் அவரே ! --- இதோ

3. மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தல மதுவே
என்றும் துதியுடனே - அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே ! --- இதோ

4. சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடு மிச் - சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உனையே ! --- இதோ

5. முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக் கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் --- இதோ

30 இயேசுவின் நாமம் இனிதான நாமம

Iyaesuvin Naamam | இயேசுவின் நாமம்

Tags:Pastor Harris

இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம் (2)

பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் – இயேசு

பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் – இயேசு

வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம் – இயேசு

நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம் – இயேசு

முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் – இயேசு

சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திடும் நாமம் – இயேசு

27 அல்லேலூயா கர்த்தரைய

அல்லேலூயா கர்த்தரையே1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்அவர் நடத்தும் செயல்களெல்லாம்

பார்த்தோரே துதியுங்கள்வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள் எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் 

பல்லவி
இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் பூமியில் ஆட்சி செய்வார் அல்லேலுயா அல்லேலுயாதேவனைத் துதியுங்கள் 

2. தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள் இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள்

3. சூரியனே , சந்திரனே தேவனைத் துதியுங்கள்ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்அக்கினியே , கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள் அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்

4. பிள்ளைகளே , வாலிபரே தேவனைத் துதியுங்கள் வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்பெரியவரே , பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்

5. ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள் அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள்

26. அனாதி தேவன் உன் அடைக்கலமே

அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

அனுபல்லவி

இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்

சரணங்கள்

1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார் 
தூய தேவ அன்பே 
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார் --- இந்த

2. கானகப் பாதை காரிருளில் 
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே --- இந்த

3. கிருபை கூர்ந்து மன துருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை
உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் --- இந்த 

4. இப்புவி யாத்திரை கடந்திடுவாய்
தூய தேவ தயவால்
கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினிலே
கிடைக்கும் இளைப்பாறுதலே --- இந்த

5. வறண்ட வாழ்க்கை செழித்திடுமே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் --- இந்த

6. ஆனந்தம் பாடித் திரும்பியே வா
தூய தேவ பெலத்தால்
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் --- இந்த

Monday, October 17, 2016

25.சாலேமின் ராசா சங்கையின் ராசா

சாலேமின் ராசா சங்கையின் ராசா சுவாமி வாருமேன் – இந்தத்
தாரணி மீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் – சாலேமின்

சீக்கிரம் வருவேநேன்றுரைத்துப் போன செல்வக் குமாரனே – இந்த
சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற செய்தி கேளீரோ – சாலேமின்

எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண் பூத்துப் போகுதே – நீர்
சுட்டிக்காட்டிப் போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே – சாலேமின்

நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடி வாடுதே – சாலேமின்

சாட்சியாகச் சுபவிசேஷம் தாரநிமேவுதே – உந்தஞ்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே – சாலேமின்