Monday, November 07, 2016

112 ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை
பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த
பாத்திரனை யூத கோத்திரனை -என்றும்

அன்னை மரிசுதனை புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை

கந்தை பொதிந்தவனை வானோர்களும் வந்தடி பணிபவனை மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை வான பரன் என்னும் ஞான குருவானை

செம்பொன்னுருவானைத் தேசிகர்கள் தேடும் குரவானை அம்பரமேவிய உம்பர் கணத்தோடு அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி

100 எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே நீ

எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய் இந்நாள் வரையிலே உன்னாதனார் செய்த எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது- எந்நாளுமே

1. பாவங்கள் எத்தனையோ – நினையாதிருந்தாருன் பாவங்கள் எத்தனையோ பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் பாரினில் வைத்த மா தயவை நினைத்து – எந்நாளுமே

2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை நித்தமுனை முடி சூட்டினதுமன்றி நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே

3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே பூர்த்தியாய் நனமையாலுன் வாயை
உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு இன்னும் இளமை போலாகவே செய்ததால் – எந்நாளுமே

4. பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள் சாலவும் தங்குமே சத்தியமேயிது – எந்நாளுமே

5. மன்னிப்பு மாட்சிமையாம் – மா தேவனருளும் மன்னிப்பு மாட்சிமையாம் எண்ணுவாயோ கிழக்கும் மேற்கும் தூரமே மண்ணில் உன்பாவன் அகன்றத் தூரமே – எந்நாளுமே
6. தந்தை தன பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ தந்தை தன பிள்ளைகட்கு எந்த வேளையும் அவரோடு தங்கினால் சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே – எந்நாளுமே