Friday, September 08, 2017
Thursday, September 07, 2017
489. எந்தன் கன்மலை ஆனவரே என்னை காக்கும் தெய்வம் நீரே
எந்தன் கன்மலை ஆனவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே
ஆராதனை உமக்கே (4)
உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே
ஆராதனை உமக்கே (4)
எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயம் இல்லையே
ஆராதனை உமக்கே (4)
எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணி துதித்திடுவேன்
ஆராதனை உமக்கே (4)
Wednesday, September 06, 2017
484. எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்
1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன்
2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே
3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை
மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா
4. நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே காத்திருப்பேன்
கண்ணீர் ஜெபம் கேளுமே கருணையின் பிரவாகம் நீரே
481. அன்பே! அன்பே! அன்பே! ஆருயிர் உறவே,
அன்பே! அன்பே! அன்பே!
ஆருயிர் உறவே,
ஆனந்தம்! ஆனந்தமே!
1. ஒருநாள் உம்தயை கண்டேனையா,
அந்நாளென்னை வெறுத்தேனையா,
உம் தயை பெரிதையா - என்மேல்
உம் தயை பெரிதையா.
2. பரலோகத்தின் அருமைப் பொருளே,
நரலோகரிலன்பேனையா?
ஆழம் அறிவேனோ - அன்பின்
ஆழம் அறிவேனோ?
3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே - எனையும்
அணைத்தீர் அன்பாலே.
4. பரலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப்போல்
வாடாதே ஐயா - அன்பு
வாடாதே ஐயா.
5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற்கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ - பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ!
Tuesday, September 05, 2017
480. கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே
கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே
விலையேறப் பெற்ற திருரத்தமே – அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற
விலையாக ஈந்தனரே
1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கினையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே
2. சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே
3. எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பிதையே
சிந்தித்தே சேவை செய்வேன்
4. மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணிலவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே
Monday, September 04, 2017
479.தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே
தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே
துதிகள் நடுவே கர்த்தர் தங்க
தூதர் சேனை தம்மகிமையோடிறங்க
1.எழும்பு சீயோனே ஒளி வந்ததே
எரிந்திடும் விளக்கே திருச்சபையே
காரிருளே கடந்திடுதே
கர்த்தரின் பேரொளி வீசிடுதே
2.நலமுடன் நம்மை இதுவரையும்
நிலைநிறுத்திடுதே அவர் கிருபை
கண்மணிபோல் கடைசி வரை
காத்திடும் பரமனைவாழ்த்திடுவோம்
3.குறித்திடும் வேளைஉயர்த்திடுவார்
கிறிஸ்துவின் கரத்தில்அடங்கிடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தவரை
வாழ்வினில் துதித்திடவாய்திறப்போம்
4.தெரிந்தெடுத்தார் தம்மகிமைக்கென்றே
பரிந்துரைத்திடுவார் நாம்பிழைத்திடுவோம்
இரட்சிப்பினால் அலங்கரித்தார்
இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம்
5.பெருந்தொனி கேட்க ஏறிடுவோம்
பரலோகந் திறந்தே அவர் வருவார்
உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில்
என்றென்றும் அவருடன்வாழ்ந்திடுவோம்
478. சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம்;ஆதி
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம்;ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்.
அனுபல்லவி
பாரேறு நீதனுக்கு ,பரம பொற்பாதனுக்கு ,
நேரேறு போதனுக்கு,நித்திய சங்கீதனுக்கு . -சீர்
அனுபல்லவி
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் ;
அகிலப் பிரகாசனுக்கு,நேசனுக்கு மங்களம் ;
நீதிபரன் பாலனுக்கு ,நித்திய குணாளனுக்கு,
ஓதும் அனுகூலனுக்கு ,உயர் மனுவேலனுக்கு ;-சீர்
மானாபி மானனுக்கு, வானனுக்கு மங்களம் ;
வளர் கலைக் கியானனுக்கு , ஞானனுக்கு மங்களம் ;
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு,
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு . -சீர்
பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் ;
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் ;
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு ,
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு ,- சீர்