Friday, August 04, 2017

405. பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே

பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மனவாட்டியாய்

ஆமென் அல்லேலூயா (4)

1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான எருசலேமே

2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் - மேலான எருசலேமே

3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் - ஆஹா என் எருசலேமே

4. விடுதலையே விடுதலை விடுதலையே
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே
நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன எருசலேமே

5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
மரணமில்லை மனநோயின் துயரமில்லை
அலறலில்லை அழுகையின் சோகமில்லை - தலைகராம் எருசலேமே

404. சிலுவை நிழலில் அனுதினம் அடியான்

சிலுவை நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப்பாறிடுவேன் - ஆ! ஆ!

சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்

1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தே
தளர்ந்த என் ஜீவியமே – ஆ! ஆ!
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகம்
ஏகுவேன் பறந்தே வேகம்

2. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன்
இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ! ஆ!
திருமறை இன்னிசை நாதம்
தேனிலு மினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம்

3. எவ்வித கொடிய இடருக்கு மஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ! ஆ!
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக்கொண்டால்
அலைமிக மோதிடு மந்நாள்
ஆறுதல் அளிப்பாரே சொன்னால்

403. இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார்

இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார்

இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார்

எனக்கென்ன ஆனந்தம்

 

எந்தன் வாலிப காலமெல்லாம்எந்தன் வாழ்க்கையில் துணையானார்

உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக

 

எந்தன் இதயமே உம்மைப் பாடும் எந்தன் நினைவுகள் உமதாகும்

 

பெருந்தீமைகள் அகன்றோட

எல்லா மாயையும் மறைந்தோட

உமதாவியின் அருள் காண

வரும் காலங்கள் உமதாகும் - எந்தன்

 

இந்த உலகத்தை நீர் படைத்தீர்

எல்லா உரிமையும் எனக்களித்தீர்

உம் நாமமே தழைத்தோங்க

நான் பாடுவேன் உமக்காக – எந்தன்

Thursday, August 03, 2017

395. காக்கும் கரங்கள் உண்டெனக்கு

காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்

நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை

1. நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என் மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன் --- நம்பி

2. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
கர்த்தர் உன்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போலே எழும்பிடுவாய் --- நம்பி

3. அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டுமந்தை முதலற்றாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை --- நம்பி

Wednesday, August 02, 2017

359. நானும் என் வீட்டாருமோவென்றால்

நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா - நீயும் சேவிப்பாயா?

1.கர்த்தரையே சேவிப்பது
ஆகாத தென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் யென்பதை
இன்றே தீர்மானம் செய்வாய்

2.அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார்
மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா?

3.நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா?

4.நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா?

327. தேவா நான் எதினால் விசேஷித்தவன்

தேவா நான் எதினால் விசேஷித்தவன்
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்

அனுபல்லவி

எதினால் இது எதினால்
நீர் என்னோடு வருவதினால்
எதினால் இது எதினால்
நீர் என்னோடு இருப்பதினால்

சரணங்கள்

1. மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூட செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அது போதும் என் வாழ்விலே --- தேவா

2. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது
என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன் --- தேவா

3. வாழ்க்கையில் கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒருமரம் கூடவருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு --- தேவா

Tuesday, August 01, 2017

323. பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்
ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
அல்லேலுயா அல்லேலுயா -2

இலாபமான அனைத்தையுமே 
நான் நஷ்டமென்று கருதுகிறேன்
இயேசு ராஜவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்

எத்தனை தான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
எனக்காக இயேசு நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்

என் மணவாளன் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன்
என் ஆசை எல்லாம் என் இயேசு தானே
அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே

என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன்
நான் உயிர் வாழும் இந்த நாட்கள் எல்லாம்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்

322. ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்

அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு

1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார்
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும்

தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்

2. எனது ஆற்றலும் எனது பாடலும்
எனது மீட்புமானார்
நீதிமான்களின் (கூடாரத்தில்) சபைகளிலே
வெற்றி குரல் ஒலிக்கட்டும்

3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல் ஆயிற்று
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன்

4. என்றும் உள்ளது உமது பேரன்பு
என்று பறைசாற்றுவேன்
துன்ப வேளையில் நோக்கி கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரையா

Monday, July 31, 2017

320. அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரைய்யா

1. அநாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரைய்யா
காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே

உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது

2. அனாதையாய் அலைந்த
என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து
காத்துக் கொண்டீரே - உங்க

3. நிலையில்லாதா உலகத்தில்
அலைந்தேனய்யா
நிகரில்லாத இயேசுவே
அன்னைது கொண்டீரே - உங்க

4. தாயின் கருவில் தோன்றுமுன்னே
தெரிந்துக் கொண்டீரே
தாயைப் போல ஆற்றி தேற்றி
அரவணைத்தீரே - உங்க

5. நடத்தி வந்த பாதைகளை
நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதிக்கிறேனைய்யா - உங்க

6. கர்த்தர் செய்ய நினைத்தது
தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக
செய்து முடித்தீரே - உங்க

313.இரட்டிப்பான நன்மைகள் தந்திட

இரட்டிப்பான நன்மைகள் தந்திட
இயேசு வாக்களித்தாரே
முன் மாரிமேல் பின் மாறி மழையே
உன்னதத்திநின்று வந்திறங்குதே

1.பெலத்தின் மேலே மா பெலனே
புது பெலன் நாம் பெற்றிட
சால்வைதனை எலிசா அடைந்தாற்போல்
சோர்வின்றி பெலன் என்றும்நாடுவோம் – இரட்டிப்

2.கிருபையின் மேல் மா கிருபை
கர்த்தரிடம் நாம் பெற்றிட
ஸ்திரீகளுக்குள் மரியாள் பெற்ற பாக்யம்
ஸ்தோத்திரம் பாடி என்றும்தேடுவோம் – இரட்டிப்

3.ஜெயத்தின் மேலே மா ஜெயமே
ஜெய தொனியாய்ப் பெற்றிட
போர் முனையில் சிறு தாவீது போல
போர் வீரராக என்றும் ஜெபிப்போம்– இரட்டிப்

4.நம்பிக்கையின் மேல் நம்பிக்கை
நல் விசுவாசம் பெற்றிட
ஆதி அப்போஸ்தலர்கள் காலம்நடந்த
அற்புதங்கள் நாம் என்றும்காணுவோம் – இரட்டிப்

5.பரிசுத்தம் மேல் பரிசுத்தம்
பங்கமில்லாமல் பெற்றிட
நீதியின் சூரியன் ஏசுவுடனே
நீதி அணிந்து என்றும் ஆளுவோம் – இரட்டிப்

6.மகிமையின் மேல் மகிமை
மறுரூபம் நாம் பெற்றிட
கண்ணிமை நேரத்திலே  ந்தேகி பரன்தெகி
கர்த்தருடன் நாம் என்றும்வாழுவோம் – இரட்டிப்

312. ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்

ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
ஆத்தும நாதன் இயேசு உம்மை ஆராதிக்கின்றோம்

ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றோம்

அல்லேலூயா (2) கீதம் பாடுவோம்
அல்லேலூயா கீதம் பாடி ஆராதிப்போம்

இன்று நாங்கள் விசுவாசத்தால் ஆராதிக்கின்றோம்
அன்று உந்தன் முகம் கண்டு ஆராதிப்போமே

சேராபீன்கள் ஆராதிக்கும் பரிசுத்தரே
சொந்த ஜனம் சந்தோஷமாய் ஆராதிக்கின்றோம்

கட்டுகள் அழியும் கவலைகள் நீங்கும் ஆராதனையில்
கோட்டைகள் உடையும் பாரங்கள் நீங்கும் ஆராதனையில்

வியாதிகள் நீங்கும் சோர்வுகள் அகலும் ஆராதனையில்
சாத்தான் ஓட சாபங்கள் தீரம் ஆராதனையில்

அப்போஸ்தலர் நள்ளிரவில் ஆராதிக்கையில்
கட்டப்பட்டோர் விடுதலையானார் ஆராதனையில்