விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார்
என்னே ஆனந்தம்
1.
நான் பாடிப் பாடி மகிழ்வேன் தினம்
ஆடி ஆடி துதிப்பேன் எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார் – விடுதலை
2.
அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார் – விடுதலை
3.
அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வலிமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார் – விடுதலை
4.
செங்கடலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன் – விடுதலை
No comments:
Post a Comment