Saturday, November 05, 2016

89 இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்ட

இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்ட

இழிஞன் எனை மீட்டருள்,

ஏசுவே, கிருபாசனப்பதியே. – இயேசுவே

 

1.

காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவு

கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!

நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து

நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, – இயேசுவே

 

2.

பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,

பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்@

தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட

தேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி, – இயேசுவே

 

3.

சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி

தீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே,

குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச் சதிக்கும்

குற்றங்கள் அறவே தீர்த்து, முற்றுமுடியக் கண் பார்த்து, – இயேசுவே

 

4.

பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை,

புண்ணியனே, உன் சரணம் நண்ணி அண்டினேன்@

எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி?

இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து, – இயேசுவே

No comments:

Post a Comment