Wednesday, October 12, 2016

No.7 Deva Siththam Niraivaera | தேவ சித்தம் நிறைவேற

Deva Siththam Niraivaera | தேவ சித்தம் நிறைவேற

Tags:Sister Saral Navaroji

தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே

முட்களுக்குள் மலர்கின்றதோர்
மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்
என்னையுமே அவர் சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார்

பொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்குவேனென்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலனளிப்பார்

அத்தி மரம் துளிர் விடாமல்
ஆஸ்திகள் அழிந்து நஷ்டம் வந்தாலும்
கர்த்தருக்குள் சந்தோஷமாய்
நித்தமும் மகிழ்ந்திடுவேன்

நீதிமானை அனுதினமும்
சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும்
கர்த்தர் அன்பை விட்டு நீங்கா
சுத்தனாய் நிலைத்திருப்பேன்

முன்னறிந்து அழைத்தவரே
முன்னின்று நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக் கென்றே
சாட்சியாய் முடித்திடுவார்

சோதனையை சகிப்பவனே
சாந்தமும் பொறுமையு முள்ளவனே
ஜீவக்கிரீடம் பெற்றிடுவான்
ஜோதியாய் பிரகாசிப்பான்

கஷ்டமெல்லாம் தொலையும் ஊர் நாள்
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
இரட்டிப்பான பங்கைப் பெற
இரட்சகர் அழைத்திடுவார்

No comments:

Post a Comment