ஆனந்தமாய் இன்பக் கானான்பல்லவிஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்
அனுபல்லவிநாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்நாதன் இயேசு என்னோடிருப்பார்
சரணங்கள்
1. சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியைக்கண்டு நன்றியுடன் பாடிடுவேன் --- ஆனந்தமாய்
2. வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன் வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார்எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன் --- ஆனந்தமாய்
3. கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்இயேசு அல்லால் ஆசை இப்பூவினில் வேறே இல்லைஎன்றும் எனக்கவர் ஆதரவே --- ஆனந்தமாய்
4. உம்மைப் பின் சென்று ஊழியம் செய்துஉம்பாதம் சேர வாஞ்சிக்கிறேன்தாரும் தேவா ஏழைக்கும் மாறாத உம் கிருபைகண் பாரும் என்றும் நான் உம் அடிமை --- ஆனந்தமாய்
5. தேற்றிடுதே உம் வாக்குகள் என்னைஆற்றிடுதே உந்தன் சமூகமேபெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன் --- ஆனந்தமாய்
No comments:
Post a Comment