ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்துபாடிடுவோம்
வல்ல இயேசு நல் தேவன்என்றென்றும் அவர் நம் தேவன்
1.தேவ வாசஸ்தலம் என்றும்இன்பமானதே
மகிமை தேவன் கிறிஸ்து இயேசுபிரசன்னம் இங்கே
மகிமை மகிமையே! என் மனம்பாடுதே மக்கள் மத்தியில்
என் மகிழ்ச்சி பொங்குதே!
2.சீயோன் பெலனே! வெற்றிசிகரமே!
சேனைகளின் கர்த்தர் இயேசுகிரியை செய்கிறார்
ஜீவன் பெலனும் ஆசீர்வாதமேநித்திய ஜீவன்
இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே!
3. கர்த்தர் சமூகம் என் வாழ்வின்மேன்மையே
கர்த்தர் இயேசு ராஜன் என்றும்உயர்ந்து நிற்கிறார்
அல்லேலூயா என் ஆவி பாடுதேஆராதனை
அழகு என்னை கவர்ந்துகொண்டதே!
4.தேவ சாயல் சபையில் தோன்றுதே
தேவர் நடுவில் இயேசு நியாயம்செய்கிறார்
தேவ சேவையே என் கெம்பீர சேவை
தேவாவியில் நிறைந்துஆடிப்பாடுவேன்
No comments:
Post a Comment