Monday, July 24, 2017

282. தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன்

தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில ஆறுகளை ஊற்றுவேன் என்றீர் .

ஊற்றும் ஐயா உம் வல்லமையை தாகத்தோடு காத்திருக்கிறேன் நான் .

1. மாம்சமான யாவர் மேலும் ஊற்ற வேண்டுமே மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே .

2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே கனவுகள் காட்சிகள் காண வேண்டுமே .

3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போல நித்தமும் தவறாமல் கனி தர வேண்டும் .

4. புதிய கூர்மையான கருவியாகணும் பூமியெங்கும் சுவை தரும் உப்பாகணும் .

5. கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும் .

6. வனாந்தரம் செழிப்பான தோட்டமாகணும் வயல்வெளி அடர்ந்த காடாகணும் .

7. நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே நல்வாழ்வும் நம்பிக்கையும் வளர வேண்டுமே .

8. தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும் எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும்

No comments:

Post a Comment